வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது GSLV F -12 !

வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது GSLV  F -12 !

'GSLV F -12 ' ராக்கெட் இன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து காலை 10.42 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

தரைவழி, கடல்வழி, வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு என்ற கட்டமைப்பை உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முடிவு செய்தது.

'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி' செயற்கைக்கோளுக்கு மாற்றாக 'என்.வி.எஸ்-01' செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்து 27.30 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது. இந்த செயற்கைக்கோள் 'ஜி.எஸ்.எல்.வி.எப்-12' ராக்கெட் மூலம் இன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

'என்.வி.எஸ்-01' செயற்கைக்கோள் 2,232 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். செயற்கைகோளை புவிநிலை சுற்றுப்பாதையில் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் நிறுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் திட்டமிடப்பட்டுள்ளது.

51 புள்ளி 7 மீட்டர் உயரமும், 420 டன் உந்துவிசை எடையும் கொண்ட ஜிஎஸ்எல்வி – எப் 12 ராக்கெட், ஜி.எஸ்.எல்.வி. வரிசையில் 15வது ராக்கெட் ஆகும். இந்த ராக்கெட்டின் மூலம் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட என்.வி.எஸ்- 01 என்கிற வழிகாட்டும் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

இதில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக் கடிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தைக் கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இந்தியா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு நிலை, வேகம், இடம், நேரம் உள்ளிட்ட தகவலை துல்லியமாக வழங்க முடியும் என கூறப்படுகிறது.

செயற்கைக்கோள் மூலம் நிலத்திலும் கடற்பரப்பிலும் பயணிக்கும் இடத்தையும், தொலைவையும் மிகவும் துல்லியமாக கணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com