இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின்(இஸ்ரோ) சார்பில் உருவாக்கப்பட்ட பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் ஓசதற்போது ன்சாட்-3 செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோளை சுமந்து கொண்டு இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவாண் விண்வெளி நிலையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11.56 மணிக்கு பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. தற்போது திட்டமிட்டபடி பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது என விஞ்சானிகள் தெரிவித்துள்ளனர்.
பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் திட்டமிட்டபடி 4வது கட்டத்தை நெருங்கியுள்ளது. புவி நோக்குக் செயற்கைகோள் 8 நானோ செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் சுமந்து செல்கிறது. புவி நோக்குக் செயற்கைகோள் EOS 6 உள்ளிட்டவை வெவ்வேறு சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன . தற்போதைய நிலையில் சுற்றுவட்டப்பாதையை நெருங்குகிறது செயற்கைகோள். கடலில் மற்றும் கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வேறுபாடுகளை கண்காணிக்க இந்த செயற்கைக்கோள் உதவும். அமெரிக்காவின் 4 மற்றும் பூடானின் 2 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட்.
இந்தியா அனுப்பும் ஓசன்சாட் செயற்கைக்கோள் பூமி கண்காணிப்புக்கும், நீர்வளங்களைக் கண்காணிக்கவும் செலுத்தப்படுகிறது. இந்த ராக்கெட் வாயிலாக, இ.ஓ.எஸ்., - 6, ஐ.என்.எஸ் - 2பி, 'ஆனந்த், தைபோல்ட், அஸ்ட்ரோகாஸ்ட்' என்ற பெயரில் 9 செயற்கைக்கோள்களை, விண்ணில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது..
இந்தியா- பூடான் இணைந்து தயாரித்த சிறிய அளவிலான செயற்கைக்கோள் உள்ளிட்ட 8 சிறிய செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. பூடான் செயற்கைக்கோளுக்கு ஆனந்த் என பெயரிடப்பட்டுள்ளது.மற்ற நானோ செயற்கைக்கோள்கள் அனைத்தும் அமெரிக்காவில் உள்ள துருவா ஏர்ஸ்பேஸ் நிறுவனம் மூலம் தயாரி்க்கப்பட்டுள்ளது.