டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் வெளியேற்றம்!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் வெளியேற்றம்!
Anushka Vats

லைநகர் டெல்லியில் உள்ளது எய்ம்ஸ் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் இன்று (7.8.2023) மதியம் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் உள்ள எண்டோஸ்கோபி வார்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து, சற்று நேரத்துக்கெல்லாம் மளமளவெனப் பரவி பற்றி எரியத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து அந்த வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நோயாளிகள் அனைவரும் பதற்றத்தில் அலறித் துடித்தனர். அதையடுத்து அவர்கள் அனைவரும் உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு இருக்கின்றனர்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க, 6 வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை போராடிக் கட்டுக்குள் கொண்டு வந்ததோடு, நோயாளிகளையும் பத்திரமாக மீட்டு, அவர்களை அவசர அவசரமாக வேறு இடத்துக்கும் மாற்றி இருக்கின்றனர். அதிர்ஷ்டவசமாக நோயாளிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்தத் தீ விபத்தின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகம் முழுவதும் கரும்புகை மண்டலமாகக் காட்சி தருகிறது. மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என்று மருத்துவமனை சார்பில் முதல்கட்ட தகவல்கள் கூறப்படுகிறது. ஆனாலும், இதுகுறித்து விரிவாக விசாரிக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த மருத்துவமனையில் ஏற்பட்டிருக்கும் தீ விபத்தால்  மருத்துவமனை அமைந்த பகுதி மட்டுமின்றி, பொதுமக்களும் பெரும் பரபரப்புடன் காட்சி தருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com