சென்னையில் இருந்து மும்பை சென்ற லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் (எல்டிடி) ரயிலில் திடீர் தீ !

சென்னையில் இருந்து மும்பை சென்ற லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் (எல்டிடி) ரயிலில் திடீர் தீ !

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6 மணியளவில் மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது.

சென்னையில் இருந்து மும்பை சென்ற லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் (எல்டிடி) ரயிலில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டதையடுத்து ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. என்ஜின் பகுதியில் இருந்து நெருப்புடன் கரும்புகை எழுந்ததால் பயணிகள் அனைவரும் அவசரம் அவசரமாக வெளியேறினர்.

சென்னையில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டு இருந்த லோக்மானிக் விரைவு ரயிலில் திடீரென தீ பரவியுள்ளது. .ரயிலில் திடீரென வந்த புகையினால் ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்திற்கு எல்லாம் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதை அடுத்து பயணிகள் அனைவரும் அவசரமாக ரயிலில் இருந்து இறக்கி விடப் பட்டனர். ரயில்வே துறையினர் திடீரென ஏற்பட்ட தீயினை விரைந்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சென்னை, பேஷன் பிரிட்ஜ் சந்திப்பை கடக்கும் பொழுது ரயிலின் முன் பகுதியில் இருந்த குளிர்சாதன பெட்டியில் தீப்பிடித்ததாக கூறப் படுகிறது. உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட உரசல் காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, கப்ளரில் ஏற்பட்ட பிரச்சனையால் புகை வெளியேறியது எனவும், உடனடியாக ரயில்வே ஊழியர்கள் சரி செய்து தற்போது ரயில் அங்கிருந்து புறப்பட்டது, இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக விபத்து பற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com