பஞ்சாப் மாநிலம் பதின்டா ராணுவ முகாமில் திடீரென துப்பாக்கிச் சூடு!

பஞ்சாப் மாநிலம் பதின்டா ராணுவ முகாமில் திடீரென  துப்பாக்கிச் சூடு!

பஞ்சாப் மாநிலம் பதின்டா ராணுவ முகாமிற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இதனை இந்திய ராணுவத்தின் தென்மேற்கு கமாண்ட் உறுதி செய்துள்ளது. பஞ்சாப் ராணுவ முகாமில் தாக்குதல் நடத்தியது யார், பின்னணியில் ஏதேனும் அமைப்புகள் உள்ளனவா? என்ற கோணத்தில் பஞ்சாப் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் உள்ள ராணுவ நிலையத்தில் அதிகாலை 4.35 மணிக்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப் பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு நிறைந்த ராணுவ முகாமிற்குள் நடந்த திடீர் தாக்குதலை அடுத்து, குறிப்பிட்ட பகுதி சுற்றி வளைக்கப் பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

மேலும் முதற்கட்ட விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என பஞ்சாப் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு 28 தோட்டாக்களும், துப்பாக்கி ஒன்றும் காணாமல் போனதாக கூறியுள்ள காவல் துறையினர். தாக்குதல் நடத்தியது யார், பின்னணியில் ஏதேனும் அமைப்புகள் உள்ளனவா என்ற கோணத்தில் பஞ்சாப் காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணுவ முகாம் முழுவதும் சுற்றி வளைக்கப் பட்டுள்ளது. ராணுவ முகாமின் அனைத்து வாயிற்கதவுகளும் மூடப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. சோதனைக்குப் பின்னரே மேலதிக விவரங்களை தெரிவிக்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதற்கட்ட விசாரணையில் பட்டிண்டா சீனியர் எஸ்.பி. குரானா கூறுகையில், "பஞ்சாப் காவல் துறை பட்டிண்டா ராணுவ முகாமுக்கு வெளியில் தயார் நிலையில் நிற்கிறது. ஆனால் ராணுவத் தரப்பில் உள்ளே நுழைய இன்னும் அனுமதி வழங்கப் படவில்லை" என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com