பா.ஜ.கவுக்கு வாய்ஸ் கொடுக்க தயாராகும் சுதீப்;  அதிர்ச்சியில் பிரகாஷ் ராஜ், அலட்சியப்படுத்திய குமாரசாமி

பா.ஜ.கவுக்கு வாய்ஸ் கொடுக்க தயாராகும் சுதீப்; அதிர்ச்சியில் பிரகாஷ் ராஜ், அலட்சியப்படுத்திய குமாரசாமி

ர்நாடக சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக திரைப்பட நடிகர்களின் பிரச்சாரம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மறைந்த ராஜ்குமார், விஷ்ணுவர்தன், போன்றோர் நேரடியாக அரசியலில் ஈடுபட்டதில்லை. அம்பரீஷ் போன்றவர்கள் தேசியக் கட்சியில் சேர்ந்து எம்.பியாக இருந்திருக் கிறார்கள். ஆனால், பா.ஜ.கவுக்கு ஆதரவாக கிச்சா சுதீப் வாய்ஸ் தரப்போவதாக அறிவித்திருப்பது சினிமா வட்டாரங்களை மட்டுமல்ல அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கன்னட திரையுலகில் மட்டுமல்ல, தென்னிந்திய திரையுலகிலும் கவனம் பெற்றவர், கிச்சா சுதீப்.  நான் ஈ படம், நடிகர் சுதீப்புக்கு பெரிய அறிமுகத்தை தந்தது. இந்நிலையில் அரசியலுக்கு வர முடிவு செய்துள்ள கிச்சா சுதீப், பா.ஜ.கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்.

முதல்வர் பசவராஜ் பொம்மையை ஆதரித்து கர்நாடாக முழுவதும் பிரச்சாரம் செய்யவும் தயாராக இருக்கிறார். சுதீப்பின் அரசியல் ஈடுபாடு, அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்றாலும், கர்நாடக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஷிவ்மோகா மாவட்டத்தைச் சேர்ந்தவரான நடிகர் சுதீப், கர்நாடகத்தில் கணிசமான அளவில் உள்ள வால்மீகி நாயக்கா சமூகத்தை சேர்ந்தவர். தென்னிந்திய அளவில் அறிமுகள்ள நடிகர் மட்டுமல்ல, பா.ஜ.கவின் சோஷியல் இன்ஜினியரிங் பார்முலாவை செயல்படுத்துவதிலும் கைகொடுப்பார் என்பதால் பா.ஜ.க இவரது ஆதரவை நாடியிருக்கிறது. வால்மீக சமூகம், தலித் மக்களிடையே செல்வாக்குள்ள சமூகமாக கருதப்படுகிறது.

சமீபத்தில் பட்டியிலனத்தைச் சேர்ந்த சாதிகளுக்கு கூடுதல் இட ஒதுக்கீட்டை முதல்வர் பசவராஜ் பொம்மை அரசு அறிவித்திருந்தது. இதன் மூலம் பட்டியலின மக்களின் இடஒதுக்கீடு பங்கு 2 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சுதீப், பா.ஜ.கவை ஆதரித்து பிரச்சாரம் செய்வதன் மூலமாக மாநிலம் முழுவதுமுள்ள பட்டியலின வாக்குகளை அள்ளிவிடலாம் என்பது கர்நாடக பா.ஜ.கவின் அரசியல் கணக்காக தெரிகிறது.

நடிகர் சுதீப்பின் அரசியல் அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும் வேதனையாக உணர்வதாகவும் நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்திருக்கிறார்.  தமிழ்நாட்டு அரசியலில் பிரகாஷ் ராஜ்  கவனம் செலுத்துவதில்லை என்றாலும் தெலுங்கானாவிலும் கர்நாடகாவிலும் பா.ஜ.க எதிர்ப்பை முன்னெடுப்பதில் தீவிரமாக இருக்கிறார்.  இதற்காக டி.ஆர். எஸ் கட்சி, குமாரசாமி கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருக்கிறார்.

சுதீப்பின் முடிவு பற்றி கருத்து தெரிவித்த ஜனதா தளம் கட்சியில் தலைவரான குமாரசாமி, பா.ஜனதா ஆட்சியில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறாததால் சினிமா நடிகர்களை வைத்து பிரச்சாரம் செய்ய முடிவெடுத்திருக் கிறார்கள். சினிமா நடிகர்கள் பிரச்சாரம் செய்ய வந்தால், அவர்களைப் பார்க்க மக்கள் கூடுவார்கள். ஆனால் அது ஓட்டுக்களாக மாறுவதில்லை. 

ஜனதா தளம் கட்சியைப் பொறுத்தவரை நானும், தேவேகவுடா மட்டுமல்ல அனைத்து தொண்டர்களும் ஸ்டார் பேச்சாளர்கள்தான். எத்தனை ஸ்டார் வந்தாலும் சமாளிப்போம் என்றார். வெற்றி முகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி சுதீப் பற்றி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com