லங்காவியை முஸ்லீம்களின் இடமாக அறிவிக்குமாறு பரிந்துரை… அமைச்சர் மன்னிப்பு!

 Datuk Seri Tiong King Sing
Datuk Seri Tiong King Sing

மலேசியாவின் லங்காவி தீவை முஸ்லீம்களின் தீவாக அறிவிக்கும்படி பரிந்துரைத்த துணை அமைச்சரின் பேச்சுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் Datuk Seri Tiong King Sing மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் மக்களவையில் செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக்கிற்கு அளித்த பதிலில் துணை அமைச்சர், லங்காவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு மது, ஆடை மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் மாநிலத்தின் உரிமையை நான் பாதுகாக்கிறேன். மேலும் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அத்தகைய நடவடிக்கையால் ஒரு முக்கிய சந்தையை பூர்த்தி செய்ய முடியும். குறிப்பாக லங்காவியை ஒரு முஸ்லிம் சுற்றுலாத் தலமாக நிலைநிறுத்த முடியும் என்றார்.

லங்காவி தீவு அண்டை நாடுகளில் உள்ள தீவுகளுடன் போட்டியிடுவது மிகவும் கடினமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிகிறோம். அதனால்தான் லங்காவியை ஒரு முஸ்லிம் தீவாக நிலை நிறுத்தலாம் என தாம் சொல்வதாக அவர் கூறினார்.

இந்த கருத்திற்கு பின்னர் மலேசியா முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன. உள்நாட்டு அமைச்சர்கள் பலரும் இதனை ஏற்க மறுத்தனர்.

சிலர் இது சுற்றுலாத்துறையை பாதிக்கும் என்றும், சிலர் இந்த ஆலோசனை குறுகிய மனப்பான்மைக் கொண்டதாகவும் தொலைநோக்கு இல்லாததாகவும் இருக்கிறது என்றும் கருத்துகளை தெரிவித்தனர்.

இந்த பேச்சுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் மன்னிப்புக் கோரியுள்ளார். வெளிநாட்டில் இருந்து திரும்பியக் கையோடு அவர் துணையமைச்சரிடம் பேசிவிட்டு செய்தியாளரிடம் பேசினார். அதாவது, "இவ்விவகாரம் தெளிவாக எடுத்துரைக்கப்படவில்லை.

இதையும் படியுங்கள்:
நல்ல தலைவர்தான் நமக்கு இப்போது தேவை – விஜய்!
 Datuk Seri Tiong King Sing

இதனால், ஏற்பட்ட குழப்பங்களுக்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பல்லின மக்கள் வாழும் இந்த இடத்தை குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு மட்டும் சொல்லவே முடியாது. குறிப்பாக சுற்றுலா இடங்களுக்கு சொல்லவும் கூடாது." என்று பேசினார்.

எனினும் அவர் கூறிய கருத்து தெளிவாக சொல்லப்பட்டதாகவே கூறி மக்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் அரசியல் வட்டாரத்தினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com