கோடைகால சிறப்பு ரெயில் சேவை இந்திய ரயில்வே அறிவிப்பு!

கோடைகால சிறப்பு ரெயில் சேவை இந்திய ரயில்வே அறிவிப்பு!

கோடைகாலம் ஆரம்பித்து விட்டது. இனி அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுகள் முடிந்து பள்ளிகளில் கோடைக்கால விடுமுறைகள் விடப் பட்டு வருகிறது அல்லவா? இதன் காரணமாக மக்கள் அதிகமாக சுற்றுலா மற்றும் பயணங்களை மேற்கொள்வர். இத்தகைய பயணத்துக்கு ரயில்வே துறை நாடு முழுவதும் 4 ஆயிரம் சிறப்பு ரெயில் சேவையினை தொடங்க உள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள், நாடு முழுவதும் உள்ள முக்கியமான இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக தெற்கு ரெயில்வேயில் 20 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த ஆண்டு கோடை காலத்தில் ரெயில் பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கவும் 217 சிறப்பு ரெயில்கள் மூலம் கூடுதலாக 4010 சிறப்பு போக்குவரத்துக்கு இந்திய ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சிறப்பு ரெயில்கள், நாடு முழுவதும் உள்ள முக்கியமான இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது. அதிகபட்சமாக தென்மேற்கு ரெயில்வேயில் 69 சிறப்பு ரெயில்களும், தென்மத்திய ரெயில்வேயில் 48 சிறப்பு ரெயில்களும், தெற்கு ரெயில்வேயில் 20 சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட உள்ளன.

இடைத்தரகர் நடவடிக்கை போன்ற முறைகேடுகளை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது இருக்கைகளுக்காக முறைகேடுகளில் ஈடுபடுதல், அதிக கட்டணம் வசூலித்தல் ஆகிய செயல்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன.

மேலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகளை ஒழுங்குப்படுத்த ரெயில்வே பாதுகாப்புப் படை ஊழியர்களின் மேற்பார்வையில் ரெயில் நிலையங்களில் கூட்டத்தை சரிசெய்யும் நடவடிக்கைகள் உறுதி செய்யப்படுகின்றன. முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த விடுமுறை காலத்தில் பொதுமக்களுக்கு எளிதான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக கூடுதலாக சிறப்பு சேவைகளை இந்திய ரெயில்வே அறிவித்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com