கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு ..!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு ..!

தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப் பட்டு உள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் பள்ளிகள் திறக்கப்படுவது இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி , 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 14-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ் நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப் பட்டது. விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 1-ந்தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஜூன் 5-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது.

கடுமையான வெயில் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பை ஜூன் 7-ந்தேதிக்கு தள்ளி வைப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். ஆனாலும் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்தது. எனவே பள்ளிகள் திறக்கப் படுவதை மேலும் தள்ளி வைக்குமாறு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகள் திறக்கப்படுவது 2-வது முறையாக மீண்டும் தள்ளி வைக்கப் பட்டது.

பள்ளி
பள்ளி

இந்நிலையில் 2023-2024-ம் கல்வியாண்டில் 6-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்புகளுக்கு 12.06.23 அன்றும் , 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 14-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (12-ந்தேதி) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் தூய்மைப் படுத்தப்பட்டு, மேஜைகள், பெஞ்சுகள் துடைக்கப்பட்டு வகுப்பறைகள் தயாராக உள்ளன. அரசுப் பள்ளிகளை பொறுத்தவரை, முதல் நாளே மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை வழங்க பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com