கூகுள் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுந்தர் பிச்சை!


கூகுள் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுந்தர் பிச்சை!
Published on

ர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் துறை என்று வரும்போது, ஆயிரம்தான் இருந்தாலும் கூகுளுக்கே கூட பயம் இருக்கத்தான் செய்கிறது என்பது நிரூபண மாகியுள்ளது. கூகுள் நிறுவனம் திடீரென்று தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. 

என்னதான் கூகுள் நிறுவனமே தன்னை Ai First Company, அதாவது ஏஐ தொழில்நுட்பத்தின் முன்னோடி என பெருமையாக அழைத்துக் கொண்டாலும், தனது ஊழியர்கள் ஏஐ சேட்பாட்களை பயன்படுத்துவது தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. குறிப்பாக OpenAi நிறுவனத்தின் ChatGPT, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Bing போன்ற Ai chatbot-கள் மட்டுமின்றி, கூகுள் நிறுவனத்தின் சொந்தத் தயாரிப்பான Bard சாட்பாட்டையும் பயன்படுத்துவது தொடர்பாக தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், ஏஐ சாட்பாட்களுடன் நிறுவனத்தின் எந்த ரகசியத்தையும் ஊழியர்கள் பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் இன்ஜினியர்கள் சாட்பாட்களால் உருவாக்கப்பட்ட எந்த Code-களையும் பயன் படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதாவது நிறுவனத்தின் முக்கியத் தரவுகளைப் பாதுகாப்பதற்கான கொள்கையை கூகுள் நிறுவனம் தன் ஊழியர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தி உள்ளது. Ai தொழில்நுட்பத்தால் பெறப்பட்ட தகவல்களை வேறொருவருடைய கேள்விக்கு பதிலாகக் கொடுக்கும் பட்சத்தில், அது டேட்டா லீக் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது கூகுளின் அச்சமாகும். 

இதன் காரணமாகவே கடந்த பிப்ரவரி மாதத்தில் கூகுள் பார்ட் செயற்கை நுண்ணறிவு சோதனையில் இருக்கும்போது, அதைப்பற்றிய எவ்வகையான இன்டெர்னல் தகவல்களையும் யாருடனும் பகிர வேண்டாம் என கூகுள் நிறுவனம் தன் ஊழியர்களைக் கேட்டுக்கொண்டது. ஆனால் தற்போது பார்ட் உலகளவில் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில், சுமார் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்த பிறகும், கூகுள் தனது ஊழியர்களை கட்டுப்படுத்துகிறது. 

இதனால் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் நிலையற்ற தன்மையை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. நிறுவனத்தின் முக்கிய தகவல்களை எஐ சேட்பாட்களுக்கு வழங்க வேண்டாம் என்று ஊழியர்களை எச்சரிப்பது கூகுள் நிறுவனம் மட்டுமல்ல. சாம்சங், ஆப்பிள், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களும் இதை செய்கின்றனர். இதை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கன்ஸ்யூமர்  CMO-வான யூசஃப் மெகதி என்பவரும் நியாயப்படுத்துகிறார். மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலவசமாகக் கிடைக்கும் பிங் சாட்பாட் மிகவும் தவறான கொள்கைகளைக் கொண்டுள்ளது என்பதையும் வெளிப்படையாகக் கூறியுள்ளார். 

AI தொழில்நுட்பத்தால் உலகில் பல சிக்கல்கள் ஏற்படும் என்பதற்காகவே, சில நாடுகள் இந்தத் தொழில்நுட்பத்தை எதிர்த்து வருகின்றனர். அயர்லாந்து நாட்டின் டேட்டா பாதுகாப்பு ஆணையம், மக்களின் பிரைவசியில் இந்த சேட்பாட்டின் தாக்கம் எப்படி இருக்கும் என கூகுளிடம் விளக்கம் கேட்டுள்ளது. விரைவில் அவர்களுக்கான சந்தேகங்களை நிவர்த்தி செய்வதாக கூகுள் நிறுவனமும் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com