மாமல்லபுரத்தில் மாஸ்க் அணிந்து நடந்த சுந்தர் பிச்சை!

மாமல்லபுரத்தில் மாஸ்க் அணிந்து நடந்த சுந்தர் பிச்சை!
Published on

அமெரிக்க கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சைக்கு இந்திய அரசு சமீபத்தில் பத்மபூஷண் விருது அளித்து கவுரவித்தது. அமெரிக்காவிலுள்ள இந்திய தூதர் தரன் ஜித் சிங் சந்து இந்த விருதை சான்பிராசிஸ்கோவில் வசிக்கும் சுந்தர் பிச்சையிடம் நேரில் சென்று சமர்ப்பித்தார்.  இதையடுத்து இந்தியா வந்த சுந்தர் பிச்சை, பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேற்று சந்தித்து நன்றி தெரிவித்தார்.

கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமாக இருக்கும் ஆல்பாபெட் நிறுவனத்திற்கு சி.இ.ஓ-வாக இருக்கும் சுந்தர் பிச்சை,, தமிழகத்தில் பிறந்தவர். இவர் பள்ளி படிப்புகளை தமிழகத்தில் முடித்து பின்னர் கரக்பூர் ஐஐடியிலும், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திலும் மேற்படிப்பை முடித்தார்.

சுந்தர் பிச்சை நேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்து உலக புகழ்பெற்ற சுற்றுலாதளமான மாமல்லபுரத்தை தன் குடும்பத்துடன் சுற்றிப் பார்த்தார். சுந்தர் பிச்சை தன்னை யாரும் அடையாளம் காணாத வகையில் தலையில் தொப்பியும், முகத்தை மறைக்கும் வகையிலான மாஸ்க்கும் அணிந்திருந்தது குறிப்பிடத் தக்கது. மகாபலிபுரத்தில் பல்லவர் கால கோவில் மற்றும் சிற்பங்களை குடும்பத்துடன் கண்டு ரசித்த சுந்தர் பிச்சையின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com