சூப்பர் கார், சூப்பர் ஆபத்து? - 10 கோடி மதிப்புள்ள கார் திடீரென தீபிடித்ததால் பரபரப்பு..!

மும்பையில் அன்று ஓரு நாள் எரிந்தது , இன்று இன்னொரு லம்போர்கினி எரிகிறது. இம்முறை பெங்களூருவில். இது இனி அரிய நிகழ்வு அல்ல – இது ஒரு தொடர்ச்சியான முறையே
Lamborghini car
Lamborghini
Published on

பெங்களூருவில் நடந்த பரபரப்பான சம்பவம் இணையத்தில் பரவலாகப் பேசப்படுகின்றது. ₹10 கோடி மதிப்புள்ள லம்போர்கினி அவென்டாடர் (Lamborghini Aventador) திடீரென சாலையிலேயே தீப்பிடித்து எரிவதைக் காணலாம்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, ரேமண்ட் குழுமத்தின் தலைவர் மற்றும் வாகன ஆர்வலரான பில்லியனர் கௌதம் சிங்கானியா, லம்போர்கினி வாகனங்களின் பாதுகாப்பு தரம் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இந்த அவென்டாடர் வாகனத்தின் உரிமையாளர் சமூக ஊடகப் பிரபலம் சஞ்சீவ், Instagram-இல் "Nimma Mane Maga Sanju" என்ற பெயரில் பரவலாக அறியப்படும் இளம் செல்வந்தர் ஆவார்.

சம்பவம் நடைபெறும் போது, சாலையில் தீக்காய்ந்து எரிந்த வாகனத்தை தீயணைப்புக் கருவி மூலம் பொதுமக்கள் அணைக்க முயற்சித்த காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.

“இது இனி அரிதான சம்பவமில்லை” – கௌதம் சிங்கானியா

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கௌதம் சிங்கானியா தனது Instagram பக்கத்தில் 2024 டிசம்பரில் மும்பையில் நடந்த இன்னொரு சம்பவத்திலும், லம்போர்கினி ரெவுல்டோ (Revuelto) வாகனம் தீப்பிடித்திருந்தது. 

“மும்பையில் அன்று ஓரு நாள் எரிந்தது , இன்று இன்னொரு லம்போர்கினி எரிகிறது. இம்முறை பெங்களூருவில். இது இனி அரிய நிகழ்வு அல்ல – இது ஒரு தொடர்ச்சியான முறையே!” என்று எழுதி, லம்போர்கினி நிறுவனத்தின் மௌனத்தை விமர்சித்தார்.

“லம்போர்கினி நிறுவனத்தின் வாகனங்கள் எதனால் தொடர்ந்து தீப்பிடிக்கின்றன? அவை பாதுகாப்பானவையா?

இந்தியாவில் அவற்றை தொடர்ந்து விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமா?” என்ற கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.

அப்போதும் சிங்கானியா, “இவ்வளவு விலைமிக்க மற்றும் புகழ்பெற்ற வாகனங்களுக்கு இது போல் பாதுகாப்பு குறைவான நிலை ஏற்படுவது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.

தரத்தின் மீதான நம்பிக்கையை இது கேள்விக்குள்ளாக்குகிறது” என்று தெரிவித்திருந்தார்.

59 வயதான கௌதம் சிங்கானியா, Raymond Group தலைவராக இருப்பதுடன், Super Car Club எனும் வாகனக் கிளப்பின் நிறுவுநராகவும் உள்ளார். அவர் Ferrari Challenge உள்ளிட்ட சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று, 2025 மோனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்திலும் கலந்து கொண்டுள்ளார்.

வாகன பாதுகாப்பு குறித்து அவரின் கருத்துகள் இந்திய வாகன ஆர்வலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படியுங்கள்:
கார் பிரியர்களுக்கு ஒரு அற்புத செய்தி: இனி ஜப்பானிய எஸ்யூவியும் உங்க பட்ஜெட்டில்!
Lamborghini car

இந்தச் சம்பவத்தை அடுத்து, லம்போர்கினி நிறுவனத்திடம் பதிலடி வருவது எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் சூப்பர் கார்கள் பாதுகாப்பு தரம் அடிப்படையில் பரிசீலிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com