மனம் நெகிழ்ந்து நன்றி சொல்லிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

மனம் நெகிழ்ந்து நன்றி சொல்லிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு முக ஸ்டாலின் உட்பட திரையுலக அரசியல் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு ''அனைவருக்கும் நன்றி'' மனம் உருகி நன்றி சொன்னார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நேற்று கொட்டும் மழையிலும் ரஜினியின் வீட்டுவாசலில் குவிந்த ரசிகர்கள் அவரை நேரில் பார்க்க வாழ்த்து தெரிவிக்க காத்திருந்தனர். ஆனால் ரஜினி ஊரில் இல்லை என அவரது மனைவி லதா கூறியதால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் சமூக ஊடகங்களில் சினிமாத்துறையினர், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு நேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர். வாழ்த்து மழையில் நனைந்த ரஜினி நெகிழ்ந்து போனார்.

ரஜினி
ரஜினி

இந்நிலையில் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும், கமலஹாசன், இளையராஜா, வைரமுத்து, ஷாரூக் கான், அக்ஷய் கான், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திரையுலகினருக்கும் நன்றி கூறியுள்ளார். மேலும், சச்சின் போன்ற விளையாட்டுத் துறையினர் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றிகள் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com