

கேரளாவில் மிக இளம் வயதில் உறுப்பு தானம் செய்த குழந்தையாக அறியப்பட்டவர் ஆலின் எனும் 10 மாதக் குழந்தை. கேட்பவர் மனதை நெகிழச் செய்து கண்களை நனைத்து விடுகிறது இந்த சின்னஞ்சிறு தேவதையின் கதை.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாத குழந்தையான ஆலின் ஷெரின் ஆபிரகாம் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடந்த சாலை விபத்தில் கடுமையாக காயமடைந்து மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இனி தங்கள் குழந்தை உயிர் பிழைக்க மாட்டார் என்ற துயரத்திலும் அவரது பெற்றோர் உறுப்பு தானத்திற்கு ஒப்புதல் அளித்தனர். அதன் பின்னர் ஆலினின் கல்லீரல், சிறுநீரகங்கள்,இதய வால்வு,கண்கள் போன்ற உறுப்புகள் மற்றும் திசுக்கள் பல நோயாளிகளுக்கு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பயன்படுத்தப்பட்டன.
உறுப்பு மற்றும் திசு தானம் மற்றும் மாற்று அறுவைச் சிகிச்சைகளை ஒழுங்குபடுத்தும் கேரள அரசு அமைப்பான K-SOTTO மூலம் இந்த உறுப்பு தான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இதன் மூலம் 4 பேருக்கு புதிய வாழ்வு கிடைத்ததாக தகவல்கள் வெளியாகின.
தனது உறுப்புகளைத் தந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 4 பேருக்குப் புத்துயிர் அளித்த சில நாட்களுக்குப் பிறகு அக்குழந்தைக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த சம்பவம் இந்திய அளவில் உறுப்பு தானம் குறித்து பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகக் கருதப்பட்டது.
உலகம் முழுவதும் ஆலினின் உடல் உறுப்பு தானம் குறித்த செய்திகள் வைரலானது. அப்போதைய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆலினினா பெற்றோர் எடுத்த இந்த முடிவை ஒரு மகத்தான கருணைச் செயல் என்று புகழ்ந்ததாகவும் . நடிகர் கமல்ஹாசன் அக்குழந்தையின் குடும்பத்திற்கு எழுதிய செய்தியில், "உங்கள் குழந்தை இனி மற்ற ஐந்து பேர் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவுவதன் மூலம் தொடர்ந்து வாழும்" என்று குறிப்பிட்டிருந்ததாகவும் மற்றும் மக்கள் பலரும் ஆலினின் தியாகத்தை நெகிழ்வுடன் போற்றினர்.
கேரளாவின் மிக இளைய உறுப்பு தானதாரர் எனும் நிலைத்த புகழைப் பெற்ற 10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் நினைவினைப் போற்றும் வகையில் சமீபத்தில் .
இந்நிலையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்து கேரளாவின் மிக இளம் உறுப்பு தான கொடையாளி ஆன 10 மாதக் குழந்தை ஆலினின் பெயரில், புதிய ப்ராண்ட் நோட்டு புத்தகங்களை வெளியிட்டது கேரள அரசு.
விபத்தில் மூளைச்சாவு அடைந்து மறைந்த தங்கள் ஆசை மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்து நான்கு பேரை வாழவைத்த ஆலினின் பெற்றோரின் தியாகத்தை போற்றும் வகையில் இது செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
இனி கேரள குழந்தைகள் கைகளில் தவழும் நோட்டுப் புத்தகம் வாயிலாக குழந்தை ஆலின் வாழ்வாள்.