

தகவல் தொழில்நுட்பம் தந்த பாதுகாப்பு வசதிகளில் முக்கியமானது சிசிடிவி கேமரா. வீடுகள் முதல் அலுவலகங்கள் வரை கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றங்கள் நிகழாத வண்ணம் கண்காணிக்கப் படுகிறது. ஆனால் குற்றங்களைத் தடுக்கும் சிறந்த மக்கள் பணியில் இருக்கும் சில காவல் நிலையங்கள் இந்த சிசிடிவி கேமராக்களை இன்னும் பொருத்தாமல் இருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்று முக்கிய செய்தியாகி உள்ளது. உச்ச நீதிமன்றம் பல மாநிலங்களில் காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது.
காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தாத நிலை குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு தொடர்ந்தது. இது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவல் நிலைய மரணங்களை தடுப்பதற்கு சிசிடிவி கேமராவை பொருத்தப்பட வேண்டும் எனவும் அடுத்த விசாரணைக்குள் காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தவில்லை எனில் உள்துறை செயலர்கள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.இதுவரை 11 மாநிலங்கள் மட்டுமே பிரமாண பத்திரம் தந்துள்ளதாகவும் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் எஞ்சிய மாநிலங்களும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு முன் 2020-இல் இந்திய சுப்ரீம் கோர்ட் அனைத்து காவல் நிலையங்களிலும் (police stations) CCTV கேமராக்கள் + ஆடியோ பதிவு செய்யும் சாதனங்கள் (“audio recorders”) பொருத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. குறிப்பாக interrogation (விசாரணை) அறைகள், lock-ups, காவல் நிலையத்தின் உள்ள நுழைவும் வெளிவரும் பகுதிகள், வராண்டாக்கள், லாபி, ரிசப்ஷன், அதிகாரிகளின் அறைகள், கழிப்பறைகள் போன்ற பகுதிகளில் கேமராக்கள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சில மாநிலங்கள், கோர்ட்டு உத்தரவுகளை ஏற்று காவல் நிலையங்களில் உள்ள வசதிகளுக்கான சொந்த திட்டங்களை எடுத்துள்ளன அதில் கேரளா முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் சில இடங்களில், கேமராக்கள் உள்ளதாகக் கூறினாலும் அவைகள் நீண்ட காலமாக செயல்படாத நிலையில் இருந்தது குறித்து நீதிமன்ற கவனத்தை ஈர்த்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின் முக்கிய நோக்கம் custodial torture (கைதின் போது செய்யப்படும் வன்முறை / துரோகம்) போன்றவற்றை தடுப்பதே ஆகும். தேவையான சமயம் சேமிக்கப்பட்ட அந்த கேமரா பதிவு கொண்டு மனித உரிமை மீறல்கள் உள்ளதா என்று சோதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது நீதிமன்றம்.
விரைவில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி காவலர்கள் மற்றும் அங்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்பதே மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து.