உச்சநீதிமன்றத் தீர்ப்பு / ஆங்கிலம் மட்டுமல்ல இனி தமிழிலும் கிடைக்கும் - சாத்தியமா?

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

மும்பையில் நடைபெற்ற காராஷ்டிரா- கோவா வழக்கறிஞர்கள் சங்க நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளில் வெளியிடவேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. பல மூத்த நீதிபதிகள் இது குறித்து தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்கள். இந்நிலையில் தற்போதைய தலைமை நீதிபதி பேசியிருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

தலைமை நீதிபதியின் கருத்தை வழிமொழிந்து, பிரதமர் மோடி டிவிட்டரில் தன்னுடைய கருத்தை பகிர்ந்திருக்கிறார். இது ஒரு பாராட்டுக்குரிய சிந்தனை. இது நிறைய பேருக்கு பயன்படும் என்றார், பிரதமர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, மாநிலக்கட்சிகள், தேசியக் கட்சிகள் என பாகுபாடு காட்டாமல் அனைத்து கட்சிகளும் இதே கருத்தை ஆதரித்திருக்கின்றன.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்களை இந்திய மொழிகளில் வெளியிடுவது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்து இருப்பதை தமிழக முதல்வர் ஸ்டாலினும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இருவருமே வரவேற்று ஆதரித்திருக்கிறார்கள். இனி இதை சாத்தியமாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பாட்டாக வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் ஒவ்வொன்றும் அன்றைய நாளின் பேசுபொருளாக இருக்கக்கூடியவை. அவற்றை உடனுக்குடன் பல்வேறு பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வதற்கு ஏராளாமான மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படும்.

நாடாளுமன்ற விவாதங்களை உடனுக்குடன் மொழிபெயர்ப்பது போல் நீதிமன்ற உத்தரவுகளையும் உடனுக்குடன் செய்தாக வேண்டும். நல்ல முயற்சி தான். ஆனால், எந்தளவுக்கு சாத்தியம் என்பதை அரசுகள் தான்தெளிவுபடுத்த வேண்டும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com