பா.ஜ.க.,வில் பதவி வழங்குவது தொடர்பாக சூர்யா சிவாவிற்கும் சிறுபான்மையினர் அணி தலைவரான டெய்சி சரணுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான ஆடியோ டேப் தற்போது, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.
சூர்யா சிவாவுக்கும், பெண் நிர்வாகி டெய்சி சரணுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பெண் நிர்வாகியை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பொது பாக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, தனது தந்தை மற்றும் தி.மு.க மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தி.மு.க.,வில் இருந்து விலகி பா.ஜ.க.,வில் இணைந்தார். இதனையடுத்து தி.மு.க நிர்வாகிகளை தொடர்ந்து விமர்சித்து பல்வேறு கருத்துகளை சூர்யா தெரிவித்தார்.
இந்தநிலையில் பா.ஜ.க.,வில் பதவி வழங்குவது தொடர்பாக சூர்யா சிவாவிற்கும் சிறுபான்மையினர் அணி தலைவராக டெய்சி சரணுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பா.ஜ.க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெய்சி சரண் கடந்த ஆண்டு பா.ஜ.க.,வில் இணைந்த அவருக்கு சிறுபான்மையினர் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல திருச்சி சிவாவிற்கு ஓ.பி.சி அணியில் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பா.ஜ.க சிறுபான்மையினர் அணியில் மற்றவர்களுக்கு பதவி வழங்குவதில் இரண்டு பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இது தொடர்பான ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் திருச்சி சிவா மற்றும் டெய்சி சரண் என இருவரும் மாறி, மாறி சண்டை போட்டுக்கொள்கின்றனர். மிகவும் மோசமான ஆபாச வார்த்தைகளால் டெய்சி சரணை சூர்யா திட்டியும் உள்ளார். சூர்யா சிவா அந்த பெண் தலைவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளாதாக சொல்லப்படுகிறது . மேலும் நீ யாரிடம் வேண்டுமானாலும் சொல், அண்ணாமலையிடம் சொல், அமித் ஷா, மோடியிடம் சொல் எனவும் பேசியுள்ளார்..
பா.ஜ.க.,வில் பெண் தலைவருக்கு மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை நேரத்தில் பெண் தலைவருக்கே இந்த நிலையா என மற்ற கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ‘தான்தோன்றி’ தனமாக பேசக்கூடாது. செய்தி தொடர்பாளர்களை தவிர யாரும் ‘நேர்காணல்’ கொடுக்கக்கூடாது என கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் அண்ணாமலை. சூர்யா சிவாவிற்கு கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க தடைவிதித்துள்ளார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.