கிரேன் விபத்தில் நூலிழையில் தப்பிய  ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன் !

கிரேன் விபத்தில் நூலிழையில் தப்பிய ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன் !

மும்பையில் பாடல் படப்பிடிப்பின் போது கிரேன் விபத்து ஏற்பட்டதில் ஏ.ஆர். ரஹ்மான் மகன் ஏ.ஆர். அமீன் நூலிழையில் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார்.

பாடல் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் நூலிழையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் உயிர் தப்பியுள்ளார். இதுதொடர்பான தகவலை ஏ.ஆர்.அமீன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் மகன் ஏ.ஆர். அமீன் இசை கலைஞராகவும், பாடகராகவும் இருந்து வருகிறார். இவரும் பல்வேறு மொழி படங்களுக்கு பாடல் பாடி வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் மும்பையில் பாடல் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலங்கார விளக்குகள் திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக அவர் இன்டாகிராமில் அதிர்ச்சி தகவல் பகிர்ந்துள்ளார்.

‘ஓ காதல் கண்மனி’ படத்தின் மூலம் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர். யுவன் சங்கர் ராஜா இசையிலும் அவர் பாடியுள்ளார். அவ்வப்போது, ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார். மேலும் தந்தை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இசை நிகழ்ச்சிகளில் ஏ.ஆர்.அமீன் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர்.அமீன் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் பாடலுக்காக நடத்தப்பட்ட படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்த புகைப்படங்களை அமீன் பகிர்ந்துள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு பாடல் படப்பிடிப்பு நடந்த போது படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்டிருந்த செட்டும், அலங்கார விளக்குகளும் அறுந்து விழுந்து நிகழ்ந்த விபத்தில் தான் நூலிழையில் தப்பியதாக அமீன் பகிர்ந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.அமீன்,” இன்று பாதுகாப்பாகவும், உயிருடனும் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும், பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஆன்மிக குருமார்களுக்கும் நன்றியைக் கூறிக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து திரைத்துறையினர் பலரும் அமீனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com