பாராளுமன்ற தேர்தலில் பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்தி பலத்தை காட்ட உள்ள எஸ்.வி. சேகர்!

பாராளுமன்ற தேர்தலில் பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்தி பலத்தை காட்ட உள்ள எஸ்.வி. சேகர்!

பிராமணர்களுக்காக புதிய கட்சி தொடங்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகரும், முன்னாள் எம்எல்ஏ வுமான எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதிக்கும் ஏதோ ஒரு பெயரில் கட்சி உள்ளது. அரசியல் அங்கீகாரத்தை பெறும் போது தான் சமுதாயத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதை உணர்ந்து இந்த கட்சிகள் எல்லாம் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிராமணர்களுக்காக தமிழகத்தில் விரைவில் புதிய கட்சி தொடங்கப் பட உள்ளது என எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.

பிராமணர்களுக்காக புதிய கட்சி தொடங்கப்பட்டு தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் பிராமணர்கள் கட்சி தேர்தலில் போட்டியிடும். அதற்காக குழு உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழு அறிவிக்கும். 33 தொகுதிகளில்பிராமணர்கள் நிற்பார்கள். பிராமணர்கள் மட்டும் ஓட்டு போட்டால் போதும்” என எஸ்.வி.சேகர் தெரிவித்தார். இது தொடர்பான அனைத்து வேலைகளும் முடிவடைந்து தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பெயர், கொடி எல்லாம் கிடைத்தவுடன் புதிய கட்சி செயல்படும் என்கிறார்.

பிராமணர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்காகவே இந்த புதிய கட்சி தொடங்கப்படுகிறது. சட்டசபையில் ஒரு பிராமணர் கூட எம்.எல்.ஏ. வாக இல்லை. பிராமணர்களின் புதிய கட்சி தொடங்கப்பட்ட பின்னர் அதில் பல்வேறு பிராமண சமுதாயத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இணைந்து செயல்பட உள்ளனர்.

அப்போது தான் கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்பது தெரியவரும். அதே நேரத்தில் என்னை தலைமை தாங்குவதற்கு அழைத்தால் அதற்கு நான் தயாராகவே உள்ளேன். பாராளுமன்ற தேர்தலில் பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்தி பலத்தை காட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com