#BREAKING : பிரபல யூ-டியூபர் சவுக்கு சங்கரின் தாயார் காலமானார்..!

savukku sankar
savukku sankar
Published on

தமிழ்நாட்டின் மிக பிரபலமான யூடியூபர்களில் ஒருவராக சவுக்கு சங்கர் இருக்கிறார். இவர் முன்னாள் காவல்துறை அலுவலராக பணியாற்றியவர். இவரது அரசியல் சார்ந்த செய்திகளினால் பலமுறை காவல்துறையினால் கைது செய்யப்பட்டவர். 

கடந்த சில தினங்களுக்கு முன் ஏப்ரல் 8, 2026 அன்று ஆந்திராவில் வைத்து சவுக்கு சங்கரை தமிழக காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் சவுக்கு சங்கரின் தாயாரான கமலா அவர்கள் இன்று(ஏப்ரல்.13) மதியம் காலமானதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இவர் தனது மகன் சவுக்கு சங்கரை சிறையில் இருந்து விடுவிக்க தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார். தற்போது சவுக்கு சங்கருக்கு தாயாரின் இறுதிக் கடமையாற்ற வேண்டி நீதிமன்றம் பரோல் வழங்கியுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com