சுதேசி ராணுவ விமானத் தயாரிப்பு தொழிற்சாலை: குஜராத்தில் பிரதமர் துவக்கம்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தியாவுக்கு கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பம் தர அமெரிக்கா ஒரு காலத்தில் மறுத்தது. இப்போது இந்தியா ஒரே சமயத்தில் 36 செயற்கைக் கோள்களை ஏவி சாதித்துள்ளது. மேலும் உள்நாட்டிலேயே நாம் இப்போது விமானங்கள் தயாரிக்கவிருக்கிறோம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் பேசினார்.

 ஸ்பெயின் நாட்டின் ஏர்ப்ஸ் நிறுவனத்தின் சி 295 ரக விமானங்களில் மொத்தம் 56 விமானங்களை இந்தியா வாங்குவதற்கு சென்ற வருடம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 16 விமானங்கள் ஸ்பெயின் தயாரித்து அளிக்கப்படும் என்றும் மீதமுள்ள 40 விமானங்கள் நம் நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்றும் ஒப்பந்தமானது.

 இந்நிலையில் இந்த விமான தயாரிப்பு தொழிற்சாலை குஜராத்தின் வதோதராவில் உருவாகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டிப் பேசியதாவது,

 இந்திய ஆய்வு மையமான இஸ்ரோவுக்கு கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பம் தர ஒரு காலத்தில் அமெரிக்கா மறுத்தது.

மேலும் நமக்கு உதவ முன் இருந்த ரஷ்யாவுக்கு தடை விதித்தது. ஆனால் இந்தியா இன்று ஒரே சமயத்தில் 36 செயற்கைக் கோள்களை ஏவி சாதித்துள்ளது.

ராணுவ போக்குவரத்து விமான தயாரிப்பில் மிகப்பெரிய உற்பத்தியாளராக நாம் உருவெடுக்க இருக்கின்றோம். வதோதராவில் உருவாகும் இந்த விமான தொழிற்சாலையால் நம்முடைய ராணுவம் வலிமை பெறும்.

 -இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

 இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங், குஜராத் முதலமைச்சர் பூபேந்தர் படேல், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தலைவர் என். சந்திரசேகரன், ஏர்பஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி குய்லாம்பௌரி உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com