இண்டிகோ ஊழியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஸ்வீடிஷ் நபர் கைது!

இண்டிகோ ஊழியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஸ்வீடிஷ் நபர் கைது!

குடிபோதையில் மோசமாக நடந்துகொண்ட மற்றொரு நபரைப் பற்றிய வழக்கு இது, இண்டிகோ பாங்காக்-மும்பை விமானத்தில் குடிபோதையில் இருந்தபோது, கேபின் குழு உறுப்பினரை துன்புறுத்தியதாக 63 வயதான ஸ்வீடிஷ் நாட்டவர் மும்பை போலீசாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் கிளாஸ் எரிக் ஹரால்ட் ஜோனாஸம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், இண்டிகோ ஊழியர் உணவு பரிமாறும் போது குற்றம் சாட்டப்பட்டவர் குடிபோதையில் கேபின் ஊழியரிடம் தவறாக நடந்து கொள்ளத் தொடங்கினார் என்று தெரிய வருகிறது. ஸ்வீடிஷ் நாட்டவர் கடல் உணவுகள் கேட்டிருக்கிறார், அதற்கு விமானத்தில் கடல் உணவுகள் எதுவும் தற்போது இல்லை என்று பதிலளித்த விமானப் பணிப்பெண் அதற்கு பதிலாக அவருக்கு கோழிக்கறி பரிமாறிய போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் பணம் செலுத்துவதற்காக அவரிடம் ஏடிஎம் கார்டு கேட்டபோது, அந்தப் பயணி விமானப் பணிப்பெண்ணின் கையைப் பிடிக்க முயன்றிருக்கிறார். ஆனால், கையை இழுத்துக் கொண்ட விமானப் பணிப்பெண் அந்த நபரிடம் மீண்டும், பொறுமையுடன் ஏ டி எம் பின் எண்களை அழுத்தச் சொல்லி இருக்கிறார்.

ஆனால், அந்த நபரோ அதைச் செய்யாமல் எழுந்து நின்று கொண்டு, விமானத்தின் பிற பணியாளர்கள் மற்றும் பயணிகள் முன்னிலையில் விமானப் பணிப்பெண்ணைத் துன்புறுத்தத் தொடங்கி இருக்கிறார். மற்ற பயணிகள் அவரது தகாத செயல்களை கவனித்த பிறகும், அவர் தனது கட்டுக்கடங்காத நடத்தையை தொடர்ந்திருக்கிறார், விமானப் பணிப்பெண் மீதான இந்த துஷ்பிரயோகத்திற்கு அப்போது விமானத்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் சாட்சி. அதை அடிப்படையாகக் கொண்டு வியாழன் அன்று மும்பை விமான நிலையத்தில் விமானம் (6E-1052) தரையிறங்கியபோது, அந்த ஸ்வீடிஷ் நாட்டவரை விமான ஊழியர்கள் மும்பை காவல்துறையிடம் ஒப்படைத்ததாக அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் வெள்ளிக்கிழமை அந்தேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ரூ.20,000 செலுத்தி அதே நாளில் ஜாமீன் பெற்றார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த மூன்று மாதங்களில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 8 வது கட்டுப்படுத்த முடியாத விமானப் பயணி இவர் ஆவார்.

மேலும் 2017 முதல், இது போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடும் பயணிகளுக்கு இந்தியாவில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானத்தில் இழிவான முறையில் சிறுநீர் கழிக்கும் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, சிவில் ஏவியேஷன் டைரக்டர் ஜெனரல் (டிஜிசிஏ) கட்டுப்படுத்த முடியாத பயணிகள் குறித்த வழிகாட்டுதல்களை கண்டிப்பாகப் பின்பற்றி இதுபோன்ற வழக்குகள் அனைத்தையும் புகாரளிக்குமாறு விமான நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com