ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம் !

Swiggy
Swiggy
Published on

பணிச்சுமை , ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஸ்விகி நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 ஸ்விக்கி உணவு டெலிவரி  நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த 19-ம் தேதியில் தொடங்கி 6 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 -இதுகுறித்து ஸ்விக்கி ஊழியர்கள் தெரிவித்ததாவது;

 ஸ்விக்கியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இதுவரை வாரம் ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப் பட்டு வந்தது. ஆனால் தற்போது ஸ்விக்கி நிறுவனம் கொண்டு வந்த புதிய நடைமுறையின்படி, இந்த புதிய ஊக்கத்தொகைகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டதுடன் வேலைநேரமும் அதிகரிக்கப் பட்டுள்ளது.

Swiggy Delivery
Swiggy Delivery

இதுவரை தினம்  12 மணி நேரமாக இருந்த வேலை நேரம் இப்போது 16 மணி நேரமாக அதிகரித்கப் பட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோல் செலவு, உணவு செலவு, வாகன செலவுகள் போக 7,000 மட்டுமே சம்பளமாக கிடைக்கிறது.

எனவே பழைய நடைமுறையின் படி ஊக்கத்தொகை, வேலை நேரம்  மற்றும் சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து ஸ்விக்கி உணவு டெலிவரி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.

 -இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஸ்விக்கி ஊழியர்கள் கலெக்டரிம் மனு கொடுத்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com