2வது நாளாக தொடரும் ஸ்விக்கி போராட்டம்: ஊழியர்களின் ஐடி-கள் முடக்கம்!

2வது நாளாக தொடரும் ஸ்விக்கி போராட்டம்: ஊழியர்களின் ஐடி-கள் முடக்கம்!

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஸ்விக்கி ஊழியர்களின் ஐடி-களை நிர்வாகம் முடக்கி உள்ளது. இந்த பிரச்சனையில் தொழிலாளர் நலத்துறை தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

ஊதியம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் பெரும்பகுதியான தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். வேலூர் மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் முழு அளவில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

சென்னையில் 90 விழுக்காடு ஆர்டர்கள் டெலிவரி செய்ய முடியாத அளவிற்கு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக பாரிமுனை பகுதியில் 500 ஆர்டர்களில் 15 மட்டுமே டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த போராட்டத்தில் முன்னணியில் உள்ள ஊழியர்களின் லாகின் ஐடி-களை நிர்வாகம் முடக்கி உள்ளது.

ஸ்விக்கி ஊழியர்களின் ஐடி முடக்க
ஸ்விக்கி ஊழியர்களின் ஐடி முடக்க

இந்த பிரச்சனையில் தொழிலாளர் துறை தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருடகள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியது. இதுகுறித்து துணை ஆணையரை சந்தித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணா மனு அளித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்விகி நிர்வாகம் ஏற்கெனவே வழங்கி வந்த சலுகைகளை பறித்துவிட்டது. கேள்வி கேட்கும் ஊழியர்களை பழிவாங்குகிறது. கொத்தடிமைகளை விட கேவலமாக நடத்துகிறது. ஒருநாளில் ஈட்டும் வருவாயை விட அதிகமாக அபராதம் விதிக்கிறது. இந்த நிலையில்தான் ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தள்ளப்பட்டனர்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை காவல்துறை மிரட்டுகிறது. சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி போராட்டத்தை உடைக்க முயற்சிக்கின்றனர். நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வரவும் மறுக்கிறது. தற்போது ஊழியர்களின் லாகின் ஐடி-களை முடக்கி உள்ளது. எனவே, தொழிலாளர் துறை இனியும் காலதாமதம் செய்யாமல் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com