எழுத்துக்கள் மூலம் இளைஞர் வரைந்த தாஜ்மஹால் நினைவுச்சின்னம்!

எழுத்துக்கள் மூலம் இளைஞர் வரைந்த தாஜ்மஹால் நினைவுச்சின்னம்!
Published on

மனிதர்களின் மனதைத் தூண்டி உற்சாகப்படுத்தும் ஆற்றல் கலைக்கு உண்டு. இணையதளம் என்பது ஒரு புதையல் மாதிரி. பலரும் தங்களின் படைப்பாற்றலையும், பன்முகத்திறனையும் இணையதளம் மூலம் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற விடியோக்கள் ரசிக்கத்தக்கவையாக இருப்பதுடன், திறமைகளை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன.

இப்போது நம்பமுடியாத ஒரு கலைப்படைப்பு ஆன்லைனில் வைரலாகி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கலைஞர் ஒருவர் தாஜ்மஹால் என்ற சொல்லின் எழுத்துகளை வைத்தே நினைவுச் சின்னமான தாஜ்மஹாலை வரைந்துள்ளார்.

அந்த கலைஞரின் பெயர் அக்தேவ். இவர் தனது விடியோவை இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார். “தாஜ்மஹாலை அதன் பெயரைக்கொண்டே வரைந்துள்ளேன்” என்று விடியோவில் குறிப்பிட்டுள்ளார். இவரை 35,000-த்துக்கும் மேலானவர்கள் பின் தொடர்கின்றனர்.

அந்த கலைஞர் ஒரு கரும்பலகை முன் நின்று கொண்டு கையால் சாக்பீஸ் கொண்டு “தாஜ்மஹால்” என ஆங்கிலத்தில் எழுதுகிறார். பின்னர் அந்த எழுத்துக்களை இணைத்து தாஜ்மஹால் நினைவுச்சின்னத்தை வரைகிறார். இதையடுத்து கரும்பலகையில் தாஜ்மஹால் நினைவுச்சின்னம் பளிச்சிடுகிறது. விடியோ இறுதியில் தாஜ்மஹாலுடன் அந்த நபர் போஸ் கொடுக்கிறார்.

இந்த விடியோ சமூக வலைத்தளத்தில் வெளிவந்தவுடன் அதை 20 லட்சம்பேர் பார்வையிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் 8,000 பேர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

ஒருவர், “வாவ்… சகோதரரே உங்கள் ஓவியம் அதிரவைக்கிறது… ஆச்சரியம் அளிக்கிறது. முதல் முறையாக புதுமையான தாஜ்மஹாலை பார்த்தோம் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர்…. ஃபன்டாஸ்டிக் டிராயிங். வித்தியாசமாக சிந்தித்து செயல்பட்டுள்ளீர்கள். உங்கள் திறமைக்கு சலாம். தொடரட்டும் உங்கள் பணி என்று பதிவிட்டுள்ளார்.

அக்தேவ், தாஜ்மஹால் மட்டுமல்ல, அது போல பல படங்களை ஸ்பெல்லிங்கை (வார்த்தைகளை) வைத்தே வரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com