தாம்பரம்-நெல்லை கோடைக்கால சிறப்பு ரெயில்கள் இயக்கம்!

தாம்பரம்-நெல்லை கோடைக்கால சிறப்பு ரெயில்கள் இயக்கம்!
Published on

தாம்பரம்-நெல்லை மற்றும் நெல்லை-சென்னை எழும்பூர் இடையே கோடைக்கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. நெல்லை-சென்னை எழும்பூர் இடையே மதியம் 1 மணிக்கு ஏப்ரல் 28-ந்தேதி, மே மாதம் 5,12,19,26-ந்தேதிகளில் இயக்கப்படுகிறது என தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கோடைகாலம் ஆரம்பித்து விட்டது. இனி அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுகள் முடிந்து பள்ளிகளில் கோடைக்கால விடுமுறைகள் விடப் பட்டு வருகிறது . கோடைகால விடுமுறை பயணத்துக்கு ரயில்வே துறை நாடு முழுவதும் 4 ஆயிரம் சிறப்பு ரெயில் சேவையினை தொடங்கி உள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள், நாடு முழுவதும் உள்ள முக்கியமான இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக தெற்கு ரெயில்வேயில் 20 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த ஆண்டு கோடை காலத்தில் ரெயில் பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கவும் 217 சிறப்பு ரெயில்கள் மூலம் கூடுதலாக 4010 சிறப்பு போக்குவரத்துக்கு இந்திய ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சிறப்பு ரெயில்கள், நாடு முழுவதும் உள்ள முக்கியமான இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது. அதிகபட்சமாக தென்மேற்கு ரெயில்வேயில் 69 சிறப்பு ரெயில்களும், தென்மத்திய ரெயில்வேயில் 48 சிறப்பு ரெயில்களும், தெற்கு ரெயில்வேயில் 20 சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட உள்ளன.

தாம்பரம்-நெல்லை மற்றும் நெல்லை-சென்னை எழும்பூர் இடையே கோடைக்கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

தாம்பரம்-நெல்லை இடையே (வ.எண்: 06021) இரவு 9 மணிக்கு ஏப்ரல் 27-ந் தேதி மே மாதம் 4,11,18 மற்றும் 25-ந்தேதிகளில் இயக்கப்படுகிறது.

நெல்லை-சென்னை எழும்பூர் இடையே (வ.எண்:06022) மதியம் 1 மணிக்கு ஏப்ரல் 28-ந்தேதி மே மாதம் 5,12,19,26- தேதிகளில் இயக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com