சிங்கப்பூர் மாரியம்மன் கோயில் மோசடியில் ஈடுபட்ட தமிழ் அர்ச்சகருக்கு சிறை!

சிங்கப்பூர் மாரியம்மன் கோயில் மோசடியில் ஈடுபட்ட தமிழ் அர்ச்சகருக்கு சிறை!

புகழ் பெற்ற சிங்கப்பூர் மாரியம்மன் கோயில் அர்ச்சகராகவும் தலைமை குருக்களாகவும் இருந்தவர் சிவஸ்ரீ கந்தசாமி சேனாபதி. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான தங்க நகைகள் தினசரி மற்றும் சிறப்பு வழிபாடுகளின்போது சுவாமிகளுக்குப் பயன்படுத்தப்படுவது வழக்கம். அந்த நகைகள் அனைத்துக்கும் தலைமை குருக்கள் என்ற முறையில் கந்தசாமி சேனாபதியே பொறுப்பேற்றிருந்தார். குறிப்பிட்ட ஒரு கால இடைவெளியில் கோயிலுக்குச்சொந்தமான நகைகள் அனைத்தும் சரியாக உள்ளனவா என்பதை கோயில் நிர்வாகம் கண்காணித்து உறுதி செய்வது வழக்கம்.

இந்த நிலையில், கடைசியாக கோயில் நகைகளை சரிபார்த்த போது அவற்றில் சில நகைகள் மாயமாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக தலைமை குருக்களிடம் விசாரித்ததைத் தொடர்ந்து, அவர் அனைத்து நகைகளையும் நிர்வாகத்திடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, தலைமை குருக்கள் கந்தசாமி சேனாபதி மீது போலீசில் புகார் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அந்த புகாரில் கடந்த 2016ம் ஆண்டு முதல் அவர் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது மற்றும் கோயிலுக்குச் சொந்தமான தங்க நகைகளை முறைகேடாகப் பயன்படுத்தியது மிகப்பெரும் நம்பிக்கை மோசடி என்பது போன்ற பத்து குற்றச்சாட்டுகள் அவர் மீது தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன. 37 வயதாகும் கந்தசாமி சேனாபதி கடந்த 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை இந்தக் கோயிலில் மோசடி செய்த தொகையின் மதிப்பு சுமார் 14.2 கோடி ரூபாய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Jewel Philemon

குற்றச்சாட்டின் ஆரம்பத்தில் விசாரணை செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட கந்தசாமி சேனாபதிக்கு தற்போது சிங்கப்பூர் நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டை விதித்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

கையாடல் செய்யப்பட்ட கோயிலுக்குச் சொந்தமான பணத்தின் பெரும் பகுதியை அவர் தனக்காகப் பயன்படுத்தி இருப்பதாகவும், சில வங்கிகள் மூலம் ஒரு பகுதி தொகையை அவர் இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் விசாரணையின்போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சிங்கப்பூர் வாழ் தமிழர் ஒருவர் இதுபோன்று கோயிலுக்குச் சொந்தமான நகைகளை மோசடி செய்து நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றிருக்கும் சம்பவம் சிங்கப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com