#BREAKING : தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம்..!

CM Vijay
Vijay
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம் (மே 21) செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழக முதலமைச்சர் தனது அமைச்சரவையை விரிவுபடுத்துவதை முன்னிட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா மே 21 வியாழக்கிழமை காலை சுமார் 10 மணியளவில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படக்கூடும் என கூறப்படும் நிலையில் நாளை ஆளுநர் சென்னை வருகிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.கடந்த வாரம் 10 அமைச்சர்களுடன் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், விடுபட்ட முக்கியத் துறைகளை ஒதுக்கீடு செய்யவும், கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரதிநிதித்துவம் தரவும் இந்த விரிவாக்கம் நடத்தப்பட உள்ளது.

தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உட்பட 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர். அமைச்சர்களுக்கான இலாகா கடந்த 17-ந்தேதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில்இன்னும் 22 துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே பதவியேற்ற அமைச்சர்கள் சிலரிடம் 2அல்லது 3க்கும் மேற்பட்ட துறைகள் கைவசம் உள்ளன.

அமைச்சரவை விரிவாக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவி கிடைக்கலாம் என தகவல் வெளியாகி வருகிறது.உயர்க்கல்வி மற்றும் சுற்றுலாத்துறை காங்கிரஸ் சார்பில் இடம்பெற உள்ளோருக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க.வின் எஸ்.பி.வேலுமணி தரப்பினருக்கு அமைச்சரவையில் இடம் வழங்குவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.

logo
Kalki Online
kalkionline.com