துணை ராணுவத்தினர் தமிழகம் வருகை... தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்..!

Chief Electoral Office Archana Patnaik
Chief Electoral Office Archana Patnaik image credit-prameyanews.com
Updated on

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல்  2026 மார்ச் 30 ல் துவங்கி இறுதி நாளான நேற்று (ஏப்ரல் 6) பலரும் தாக்கல் செய்து  இன்று மனு மீதான பரிசீலனை எதிரெதிர் கட்சியினரின் ஆட்சேபணைகளுடன் சரிபார்க்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  மேலும் மனுக்களை வாபஸ் பெற 9 ந் தேதி கடைசி நாள் என்றும்  அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற்று முடிவுகள் மே 4 அன்று வெளியாக உள்ளது.

ஒருபுறம் வேட்பாளர்கள் பரபரப்பு ஏற்படுத்தி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தலை ஒட்டி எந்த அசம்பாவிதங்களும் நிகழாத வண்ணம் மக்களை பாதுகாக்கும் வகையில் செயலாற்றி வருகிறது.

வருகிற 10 ந் தேதி முதல் தகுதியான வாக்காளர்களுக்கு அவர்கள் பெயர் ,முகவரி , வாக்குச் சாவடி விவரம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும் தகவல் சீட்டு விநியோகம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தேர்தல் பணிகளுக்காக வரும் 13-ஆம் தேதிக்குள் துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகை தருவார்கள் எனத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

85 வயதுக்கு மேற்பட்ட 2.5 லட்சம் வாக்காளர்கள் தபால் வாக்குக்காக பதிவு செய்துள்ளதாகவும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடத்த ரூபாய் 1302 கோடி தேர்தல் ஆணையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பதற்றம் மற்றும் மிகவும் பதற்றம் அதிகமுள்ள 5938 வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது  என்றும் சி விஜில் மூலம் 2600 புகார்கள் பெறப்பட்டு 2364 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது வாக்காளர்கள் இடையே தேர்தல் அன்று எவ்வித பதட்டமான சூழலும் இன்றி பாதுகாப்பாக சென்று ஒட்டு களை அளிக்கும் நம்பிக்கையை தந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com