தமிழகத்தில்  11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் தற்போது 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 13 முதல் ஏப். 5-ம் தேதி வரை நடைபெற்ற 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 5 வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தமிழ்நாட்டில் 3,60, 908 மாணவர்களும், 4,12,779 மாணவியர் உள்ளிட்ட மொத்தம் 8 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் 24-ம் தேதியே தொடங்கப்பட்டது.

அதன்படி முடிவுகள் சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் வெளியிடப்படப்பட்டது. அதில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.36%, மாணவர்கள் 88.99% தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களை விட மாணவியர்கள் 7.37% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86% அதிகரித்துள்ளது. தேர்வு எழுதிய 7,76,844 பேரில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முன்னதாக 10-ம் வகுப்பு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியானது. அதை தொடர்ந்து தற்போது பிளஸ்-1 முடிவுகள் 2 மணிக்கு வெளியாகிவுள்ளது.

இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in &  www.dge.tn.gov.in  அறிவிக்கப்பட்டுள்ள இணையதள முகவரிகளில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இது தவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com