போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காது: தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை!

போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காது: தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காது என்று ஊழியர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் எந்த இடத்திலும் மின் தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு முழுக்க நாளை போராட்டம் நடத்த மின்வாரிய ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். பல்வேறு விஷயங்களை கோரிக்கைகளாக வைத்து போராட்டம் நடத்த இவர்கள் முடிவு செய்துள்ளனர். மின்சார ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட காலமாக வைத்து வருகின்றனர்.,

ஆனால் இந்த கோரிக்கைகளை தமிழ்நாடு மின் வாரியம் இதுவரை நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். நாளை தமிழ்நாடு முழுக்க இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.

போராட்டம் செய்யும் நாள் பணி விடுப்பு நாளாக கருத்தில் கொள்ளப்படும். இதை விடுமுறை நாளில் கழித்துக்கொள்ள முடியாது. மாறாக லாஸ் ஆப் பே நாளாக கணக்கில் எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் நாளை பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை தலைமைக்கு அனுப்ப மண்டல பொறியாளர்களுக்கு மின்வாரியம் ஆணையிட்டுள்ளதாகவும், ஊழியர்கள் போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com