மின்தடைக்கான காரணங்கள் என்ன? இன்று பிற்பகல் 3 மணிக்கு அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

சிடிஆர் நிர்மல் குமார்!
சிடிஆர் நிர்மல் குமார்!source:newsmill
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுவது தொடர்பாக இன்று தலைமை செயலகத்தில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் துறை சார்ந்த அதிகாரிகளுடன்(காலை 11 மணிக்கு) அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் அதிகரித்து வரும் மின் தேவை மற்றும் திடீர் மின்வெட்டுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்தடை புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இந்த மின்தடை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை, திருவள்ளூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவும் மின் தேவை, குறைந்த மின்னழுத்தம் மற்றும் திடீர் மின்தடைக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படுகிறது. முன்னதாக மின் தடை காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மின்தடை தொடர்பாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதால் அது தொடர்பான நிரந்தர நடவடிக்கை மற்றும் நிரந்தர தீர்வு குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து மின்தடை குறித்த விளக்கத்தை அமைச்சர் நிர்மல் குமார் அளிக்க இருக்கிறார்.

ஏற்கனவே சென்னையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகும், அதை சீராக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் முன்பு தெரிவித்து இருந்தார். அத்துடன் பொதுமக்கள் மின்தடை குறித்து மின்சார வாரியத்தின் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மின்தடை குறித்த புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவும், சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com