நீலகிரி வரையாடுகளைப் பாதுகாக்க 5 ஆண்டு திட்டம் அறிவிப்பு!

வரையாடு
வரையாடு

நீலகிரியில் உள்ள அரிய வகை வரையாடுகளை பாதுகாக்க ரூ.25.14 கோடியில் 5 ஆண்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றான நீலகிரி வரையாடுகள், ஊட்டி உள்ளிட்ட  மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சுமார் 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும் தன்மையுடையவை.

இவை தமிழகம், மற்றும் கேரளாவில் ஒரு சில குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. மேலும் தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகள் தமிழ்நாட்டில் சில நூறு மட்டுமே எஞ்சியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், எஞ்சியுள்ள இந்த வரையாடுகளைக் காக்க தமிழக அரசு 5 ஆண்டு திட்டத்தை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் இத்திட்டம் 2022 முதல் 2027 வரை ஐந்து ஆண்டுகளில் ரூ.25.14 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு.

டெலிமெட்ரிக் ரேடியோ காலரிங் பொருத்தி தொடர்ந்து பாதுகாத்தல், பழைய வாழ்விடங்களில் மீண்டும் வரையாட்டினை அறிமுகம் செய்தல், நோய் கண்டறிந்து பாதிக்கப்பட்ட வரையாட்டிற்கு சிகிச்சை அளித்தல், சோலை புல்வெளிகளை சீரமைத்தல், களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்றவை இத்திட்டத்தில் அடங்கும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 7-ம் தேதியை “வரையாடு தினம்” என அனுசரிக்கவும்  முடிவெடுக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com