தமிழக அரசின் "புன்னகை திட்டம்"!

தமிழக அரசின் "புன்னகை திட்டம்"!

சென்னை, நந்தனம் அரசு மாதிரி மேனிலை பள்ளியில், புன்னகை திட்டத்தின் கீழ் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனர்.

சென்னை நந்தனம் அரசு பள்ளியில், 'புன்னகை' என்ற திட்டத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்து நடமாடும் பல் மருத்துவ ஊர்தியில் அளிக்கப்படும் பல் சிகிச்சையை மேற்பார்வையிட்டனர்.

மாணவர்களின் பல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பல் சிகிச்சை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு முழுவதும் நான்கு லட்சம் மாணவர்களுக்கு பல் மருத்துவர்கள் நேரில் சிகிச்சை அளிக்க

உள்ளதாக தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், “புன்னகை என்கின்ற புதிய திட்டத்தினை இப்பள்ளியில் தொடங்கி வைத்திருக்கிறோம். பள்ளிக் குழந்தைகளை பரிசோதித்து அவர்களுக்கு ஏற்படும் வாய்வழி நோய்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தீர்வு காண்பதற்கும் இத்திட்டம் பயன்தரும்.

இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளில் பயிலும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பல் பரிசோதனைகளை செய்து அதன்மூலம் அவர்களுக்கு வாயில் ஏற்படுகின்ற பொதுவான நோய்களான பல் சொத்தை, ஈறு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், அதை கண்டறிவதற்கும் இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

முதல்வர், துணை முதல்வராக இருந்த பொழுது, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் சீரிய ஏற்பாட்டில் இதுபோன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது.

நமது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்தமாக மாணவ, மாணவியருக்கும் பல் பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவேண்டும் என்கின்ற கோரிக்கையினை முதல்வர் வாயிலாக இத்துறைக்கு வைத்துள்ள கோரிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com