தமிழக அரசின் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் அதிகரிப்பு!

டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி

தமிழக அரசின் , டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117 ஆக தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஆள் சேர்க்கை அறிவிப்பில் 7,301 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தது. இருப்பினும், நியமனம் செய்யப் பட வேண்டிய குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை 9,801 ஆக உயர்த்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டு வருவதாக கடந்த ஜனவரி மாதம் செய்திகள் கசிந்தன. இந்நிலையில், குரூப் 4 காலியிடங்களை 10,117ஆக டிஎன்பிஎஸ்சி அதிகரித்துள்ளது.

இந்த அதிகரிக்கப் பட்ட பணியிடங்கள் குறித்த திருத்தப் பட்ட அறிக்கையை தமிழக அரசின் குரூப் 4 இணைய தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. திருத்தப்பட்ட அறிவிப்பின் படி, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 274-ல் இருந்து 425 ஆகவும், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலியிடங்கள் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப் பட்டுள்ளன.

TNPSC
TNPSC

முன்னதாக, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஆள் சேர்க்கை அறிவிப்பில் 7,301 காலிப் பணியிடங்கள் நிரப்பப் படும் என்று அறிவித்தது. இருப்பினும், நியமனம் செய்யப் பட வேண்டிய குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை 9,801 ஆக உயர்த்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டு வருவதாக கடந்த ஜனவரி மாதம் செய்திகள் கசிந்தன.

இந்நிலையில், குரூப் 4 காலியிடங்களை 10,117ஆக டிஎன்பிஎஸ்சி அதிகரித்துள்ளது. இதுதவிர, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டு வசதி வாரியம் போன்ற பல்வேறு துறைகளில் கீழ் அறிவிக்கப் பட்ட 163 காலியிடங்கள் எண்ணிக்கை 252 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது.

குரூப் 4 காலியிடங்கள் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப் பட்டுள்ளதால் , குரூப் 4 தேர்வின் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com