#BREAKING : தமிழ்நாட்டின் உண்மையான கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி..!!

தமிழகத்தின் உண்மையான நிதி நிலை என்ன? இன்று மாலை வெளியான முழு விவரங்கள்.
TN govt Release
Mariya wilson and finance officialsPolimer news
Updated on

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் தமிழக வெற்றி கழகம் தலைமையில் கூட்டணி அரசாக பதவியேற்றுள்ளது. முதல்வர் விஜய் பொறுப்பேற்றதிலிருந்து சில அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

புதிய அரசாங்கம் அமைந்து ஒரு மாதத்தை கடந்து விட்டது. இதற்கு முன் தமிழகத்தை ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுக அரசாங்கங்கள், மாநில அரசு சார்பில் இதுவரை 10 லட்சம் கோடியை தாண்டி கடன் வாங்கி உள்ளதாக, புதிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தொகை இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட அதிக கடன் தொகைகளில் ஒன்றாக இருக்கிறது. தரவுகளின்படி அதிக கடன் வாங்கியதில் இந்தியாவில் நம்பர் 1மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்பது குறிப்பிட தக்கது.

இறுதியாக ஆட்சியில் இருந்த திமுக கஜானாவை காலி செய்து விட்டதாக தவெக சார்பில் தொடர்ச்சியாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை பொதுமக்கள் அறியும்படி வெள்ளை அறிக்கை விடப்படும் என்று பதவியேற்க நாளில் முதல்வர் விஜய் உறுதியளித்திருந்தார். இந்த வெள்ளை அறிக்கை மூலம் அரசுத் துறைகளின் உண்மையான நிதி நிலை மற்றும் கடன் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். கடந்த கால அரசாங்கத்தின் நிர்வாக செயல்பாடுகளை மக்கள் வெளிப்படையாக அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

இன்று மாலை 5.30 மணி அளவில் சென்னைத் தலைமைச் செயலகத்தில், நிதி அமைச்சர் மரிய வில்சன் தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார். தமிழகத்தின் சட்டமன்ற கூட்டத்தொடர் ஜூன் 18 ஆம் தேதி கூட உள்ள சூழ்நிலையில் இன்று இந்த அறிக்கை வெளியாக இருக்கிறது.

இந்த வெள்ளை அறிக்கையில் தமிழக அரசின் வருவாய் , அரசாங்கத்தின் வருவாய் இழப்புகள் , தமிழக மின்சார வாரியம் மற்றும் போக்குவரத்து துறைகளில் கடன்கள் மற்ற கடன்களைப் பற்றியும் தெளிவாக அறிவிக்கப்படும். புதிய அரசாங்கம் கொடுத்துள்ள மகளிர் உரிமைத் தொகை உயர்வு, இலவச பேருந்து பயணம் , 200 யூனிட் இலவச மின்சாரம் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதால் அரசாங்கத்திற்கு ஏற்படும் இழப்புகள் குறித்தும் இதில் விளக்கப்படும்.

கடந்த அறுபது ஆண்டுகளில் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டுகளில் வாங்கிய கடன் மிகவும் அதிகம். குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்கள் உபரி வருவாயை பெறுகின்றன. தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறை ₹78,000 கோடி. ஒரு ஆண்டுக்கு தமிழக அரசு ₹67,000 கோடி வட்டியை கட்டுகிறது.

திமுக ஆட்சியில் தனிநபர் கடன் 92 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய கடன் மட்டும் ₹5 லட்சம் கோடி

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபர் மீதும் ₹1,28,934 கடன் உள்ளது.

தமிழ்நாட்டில் மொத்த வருவாயில் வட்டி செலுத்தும் அளவு மட்டும் 22.8%

இந்தியாவின் முதன்மை வருவாய் ஈட்டும் மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாடு தற்போது சராசரிக்கும் கீழே சரிந்துள்ளது. தமிழ்நாட்டின் உண்மையான கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி. வருவாய் பற்றாக்குறை கொரோனா காலத்தைவிட அதிகரித்துள்ளது.

வருவாய் பற்றாக்குறை 78,324 கோடியாக உயர்ந்துள்ளது. இது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு உச்ச அளவாகும். அன்றாட நிர்வாக செயல்பாடுகளை சமாளிக்கவே கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம். 60 வருடத்தில் தமிழ்நாடு அரசு வாங்கிய கடனை விட திமுக அரசு அதிகம் கடன் வாங்கியுள்ளது. 60 வருடங்களில் தமிழ்நாடு அரசு வாங்கிய கடன் ரூ.5லட்சம் கோடி. தி.மு.க ஆட்சியில் கடந்த 5 வருடங்களில் வாங்கிய கடன் மட்டும் ரூ.5லட்சம் கோடி.” என்றார்

logo
Kalki Online
kalkionline.com