விஏஓக்கள் பாதுகாப்புக் கைதுப்பாக்கி வேண்டும்: டிஜிபியிடம் விளக்கம் கேட்ட தமிழ்நாடு அரசு!

கிராம நிர்வாக அலுவலம்
கிராம நிர்வாக அலுவலம்

விஏஓகளுக்கு கை துப்பாக்கி பயன்படுத்த உரிமம் வழங்க வேண்டும் என்று கேட்டு தமிழ்நாடு அரசுக்கு விடுத்த கோரிக்கைக்கு காவல்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர் ஓருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக விரோத கும்பலால் அலுவலகத்திற்கு வைத்து படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரை மணல் கடத்தல் கும்பல் வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்தது. இவ்வாறு அடுத்தடுத்து ஏற்பட்ட இரு வேறு சம்பவங்கள் தமிழ்நாட்டில் பணியாற்றக்கூடிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டு தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது.இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் கிராம நிர்வாக அலுவலர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. மேலும் மணல் கடத்தல் போன்ற சம்பவங்களில் விஏஓகளுக்கு சமூகவிரோதிகளுடன் நேரடி பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் அவர்களின் உயிர்களுக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர்களின் பாதுகாப்பை கருதி அவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவை ஏற்படும் பட்சத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கை துப்பாக்கியை பயன்படுத்த உரிமம் வழங்க வேண்டும் என்று கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கூடுதல் உள்துறை செயலாளர் தமிழக காவல்துறை தலைவர் இதுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் சேலம் மாவட்டம் ஓமலூர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன. தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் அளித்துள்ள புகார்கள் குறித்து இது நாள் வரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கூறியது, மணல் கடத்தல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வது கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மணல் கடத்தில் ஈடுபடுபவர்கள் முக்கிய பிரபலங்களாக இருப்பதால் கீழ்நிலை அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியாத சூழல். அதை மீறி எடுத்தாலும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை இருக்கிறது. இப்படி பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியதாக உள்ளது. இதனாலேயே அரசுக்கு இவ்வாறு எங்கள் சங்கம் சார்பில் கடிதம் எழுதி உள்ளோம். அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்று கூறினார்.

விஏஓக்கள் பாதுகாப்புக் கைது துப்பாக்கி வேண்டும் : டிஜிபியிடம் விளக்கம் கேட்ட தமிழ்நாடு அரசுவிஏஓக்கள் பாதுகாப்புக் கைது துப்பாக்கி வேண்டும். டிஜிபியிடம் விளக்கம் கேட்ட தமிழ்நாடு அரசு விஏஓகளுக்கு கை துப்பாக்கி பயன்படுத்த உரிமம் வழங்க வேண்டும் என்று கேட்டு தமிழ்நாடு அரசுக்கு விடுத்த கோரிக்கைக்கு காவல்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கூடுதல் உள்துறை செயலாளர் தமிழக காவல்துறை தலைவர் இதுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் சேலம் மாவட்டம் ஓமலூர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன. தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் அளித்துள்ள புகார்கள் குறித்து இது நாள் வரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கூறியது, மணல் கடத்தல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வது கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மணல் கடத்தில் ஈடுபடுபவர்கள் முக்கிய பிரபலங்களாக இருப்பதால் கீழ்நிலை அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியாத சூழல். அதை மீறி எடுத்தாலும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை இருக்கிறது. இப்படி பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியதாக உள்ளது. இதனாலேயே அரசுக்கு இவ்வாறு எங்கள் சங்கம் சார்பில் கடிதம் எழுதி உள்ளோம். அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com