#BREAKING : தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்; தேர்தல் ஆணையம் அதிரடி..!

TN home secrertary changed
TN home secrertary changedsource:dailythanthi
Updated on

தமிழ்நாட்டின் உள்துறை செயலாளர் தீரஜ்குமாரை மாற்றி மணிவாசனை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம், பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன், சென்னை  காவல் ஆணையராக இருந்த அருணும் நேற்று மாற்றப்பட்ட நிலையில் இன்று உள்துறை செயலாளரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்டப்பேரவை தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்தவே அதிகாரிகள் மாற்றம் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இன்று மாலை 5:00 மணிக்குள் உள்துறை செயலாளராக மணிவாசன் பதவி ஏற்கவும், மாற்றப்பட்டுள்ள  தீரஜ்குமாருக்கு தேர்தல் தொடர்பான எந்த பணிகளையும் ஒதுக்கக் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஜனநாயகன் இணையத்தில் வெளியானதற்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பு இல்லை - அண்ணாமலை..!
TN home secrertary changed
logo
Kalki Online
kalkionline.com