

2026 தேர்தலுக்கான முதல் பிரசார உரையாற்ற மதுராந்தகம் வந்தடைந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிஜேபியின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்.
மதுராந்தகத்தின் பிரம்மாண்ட மேடையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இடையில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி துவக்கி உள்ளார்.அரசு விழாவாக இல்லாமல் அரசியல் விழாவாக நடைபெறும் இந்த நிகழ்வில் ஒன்பது வருடங்களுக்குப் பிறகு ஒரே மேடையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டிடிவி தினகரன் இணைந்தது அரசியல் நகர்வில் முக்கியமானதாகிறது.
வெல்லும் கூட்டணி என்டிஏ கூட்டணி.. நாடு செழிக்க நல்லாட்சி மலர தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கும் ,பிரதமர் மோடி வருகையால் தற்போது சூரியன் மறைந்துவிட்டது.. எனக் குறிப்பிட்டு மோடியை வரவேற்றார் பாஜக மாநிலத் தலைவரான நயினார்.
பொன்னாடை மற்றும் ஏலக்காய் மாலை அணிவித்து மரியாதை செய்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியைத் தொடர்ந்து , அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.
பிரதமர் மோடியின் உரையிலிருந்து சில துளிகள் :
இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் நேதாஜியோடு சுதந்திர போராட்டத்தில் பல தமிழர்கள் பங்கேற்றனர்.என் தமிழக மக்களின் நாடி நரம்புகளில் வீரம் நாட்டுப் பற்று நிறைந்துள்ளது. தமிழ்நாடு ஒரு மாற்றத்திற்கு தயாராகிவிட்டது. திமுக ஆட்சிக்கான கவுண்ட் டவுன் துவங்கிவிட்டது.
திமுக என்றால் சிஎம்சி CMC அதாவது க்ரைம் மாஃபியா மற்றும் கரப்ஷன். பொய்யான வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றியுள்ளது இந்த அரசு. தமிழ்நாட்டை ஊழலற்ற பாதுகாப்பான நாடாக மாற்றிக் காட்ட வேண்டும்.
கடந்த 11 வருடங்களில் தமிழ்நாட்டிற்கு மும்மடங்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத வளர்ச்சி திட்டங்களை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அளித்துள்ளது. 11 வருடங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூபாய் 11 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் அரசை விட ஏழு மடங்கு ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி தந்துள்ளது மத்திய அரசு. தமிழ்நாட்டில் 80 ரயில் நிலையங்களை என்டிஏ அரசு மேம்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் முதலீடுகள் அதிகரிக்க மத்திய அரசுடன் இணைந்து பயணிக்கும் அரசு தமிழ்நாட்டிற்கு தேவை.
தமிழக இளைஞர்களை போதை பொருள் வசம் ஒப்படைத்து விட்டது. திமுக ஆட்சியில் போதைப்பொருள் செழிப்பாக உள்ளது.பெற்றோர்கள் கண்முன்னே போதைப் பொருளால் குழந்தைகள் நாசமாகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் போதைப்பொருள் மாஃபியா ஒழிக்கப்படும்.
ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாப்பான குடிநீர் என்பது மோடி வாக்குறுதி.பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை என்டிஏ வழங்கும்.ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது காங்கிரஸ் அதை நீக்கி மீண்டும் வர வைத்தது என்டிஏ அரசு. தமிழ்நாடு பாரம்பரியம் ,கலாச்சாரம், ஆன்மீகம் இந்தியாவின் பெருமை.
உலகத் தலைவர்கள் பலருக்கு திருக்குறளை பரிசாக வழங்கியுள்ளேன். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியாருக்கு இருக்கை அமைத்துள்ளோம். காசிவாழ் குழந்தைகள் தற்போது தமிழில் பேசிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் மொழியை தமிழர்களின் கலாச்சாரம் பண்பாட்டை நேசிக்கிறேன்.
தமிழ்நாட்டிற்கு இரட்டை எஞ்சின் அரசு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்திற்கான ஆட்சி நடக்கிறது அதை மாற்ற வேண்டும்.
உரைக்கு நடுவில் தனது அம்மாவின் புகைப்படத்தை வரைந்து கையில் ஏந்திய சிறுமியை பார்த்த பிரதமர் மோடி அந்த புகைப்படத்தை வாங்கி தனக்கு அளிக்குமாறும் அந்த சிறுமிக்கு நன்றி சொல்லி மேடையில் பாராட்டினார்.