அக்டோபர் 9ல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு!

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு
Published on

மிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் அக்டோபர் 9ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது, தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டம் அக்டோபர் மாதம் 9ம் தேதி தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கும். அன்றைய தினம் 2023-24ம் ஆண்டுக்கான கூடுதல் செலவிணங்களுக்கான மானியக் கோரிக்கை நிதியமைச்சர் தாக்கல் செய்வார் என்றார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு,''மத்திய அரசு வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திடீரென மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது.

மகளிர் மீது அக்கறை கொண்டுள்ள அரசாக இருந்தால் ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்திருக்கலாமா? தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதா நடைமுறைப்படுத்த முடியாது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஒன்றிய அரசே இந்த மசோதாவை அறிமுகம் செய்துள்ளது. அதேபோல், மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதற்கு ஏற்றாவாறு மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது என பல விஷயங்களை தெளிவுப்படுத்தால் தற்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்படும்" என தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com