

Sports Development Authority of Tamil Nadu (SDAT) தற்போது காலியாக உள்ள 34 Coach பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விளையாட்டுத் துறையில் ஆர்வமும், தகுந்த பயிற்சியும் கொண்ட நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 25.01.2026 ஆகும்.நேரடி ஆட்சேர்ப்பு மூலம் மொத்தம் 34 பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு உடன் விளையாட்டு பயிற்சிக்கான படிப்பு அல்லது விளையாட்டு துறையில் சாதனைப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் நபர்களுக்கு நிலை 12 கீழ் ரூ.35,600 முதல் 1,30,800 வரை சம்பளம் வழங்கப்படும்.
Description Details
வேலை பிரிவு : தமிழ்நாடு அரசு வேலை 2026
அறிவிப்பு : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
காலியிடங்கள் : 34
பணிகள் : Coach
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம்
கடைசி தேதி : 25.01.2026 at 05.00 PM
பணியிடம் : தமிழ்நாடு
காலிப்பணியிடங்கள் :
பணியின் பெயர் காலியிடங்கள்
Coach 30
Coach – Para 04
வயது வரம்பு :
பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் ந்பார்கள் 01.07.2026 தேதியின்படி, குறைந்தபட்சம் 21 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். அதிகபடியான வயது வரம்பு என்பது 50 வயது வரை இருக்கலாம். பாரா பயிற்சியாளர்கள் 55 வயது வரை இருக்கலாம்.
Discipline Total Vacancy
Archery 1
Athletics 4
Badminton 1
Basketball 1
Boxing 1
Canoeing and Kayaking 1
Cycling 2
Fencing 2
Football 1
Gymnastics 1
Hockey 1
Judo 1
Kabaddi 2
Para – Athletics 1
Para – Badminton 1
Para – Powerlifting 1
Swimming 2
Swimming – Diving 1
Table Tennis 1
Taekwondo 2
Tennis 1
Volleyball 1
Weightlifting 3
Wheelchair Fencing 1
கல்வித்தகுதி :
பயிற்சியாளர் (Coach):
UGC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் பயின்று பட்டம் (Bachelor’s Degree) பெற்றிருக்க வேண்டும்.
தொழில்முறைத் தகுதி (கீழே உள்ளவற்றில் ஏதேனும் ஒன்று):
தேசிய விளையாட்டு நிறுவனம் (NIS) / இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI) வழங்கிய குறைந்தது 10 மாத கால விளையாட்டு பயிற்சியாளர் டிப்ளமோ (Diploma in Sports Coaching) சான்றிதழ்.
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் (TNPESU) பெற்ற விளையாட்டு பயிற்சியாளர் முதுகலை டிப்ளமோ (PG Diploma in Sports Coaching).
குவாலியர் லக்ஷ்மிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனத்தில் (LNIPE) பெற்ற விளையாட்டு பயிற்சியாளர் முதுகலை டிப்ளமோ (PG Diploma in Sports Coaching).
விளையாட்டுத் தகுதி:
தேசியப் பள்ளி விளையாட்டுப் போட்டிகள் (National School Games) அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பாகப் பங்கேற்றிருக்க வேண்டும்.
அல்லது தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சார்பாக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
பாரா பயிற்சியாளர் (Coach – Para):
கல்வித் தகுதி: UGC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (Bachelor’s Degree).
விளையாட்டுத் தகுதி: மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் (MYAS) அல்லது அங்கீகரிக்கப்பட்ட கூட்டமைப்புகள் நடத்திய போட்டிகளில் தமிழ்நாடு மாநிலத்தின் சார்பாகப் பங்கேற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள் :
பயிற்சியாளர் (Coach):
பிரிவு: SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs: வயது வரம்பு: 21 முதல் 50 ஆண்டுகள் வரை
பிரிவு: “Others” (இதர பிரிவினர் – பொதுப் பிரிவு): வயது வரம்பு: 21 முதல் 45 ஆண்டுகள் வரை
பிரிவு: ஆதரவற்ற விதவைகள் (Destitute Widow): வயது வரம்பு: 21 முதல் 50 ஆண்டுகள் வரை
பாரா பயிற்சியாளர் (Coach – Para):
பிரிவு: மாற்றுத்திறனாளிகள் (Persons with Benchmark Disability): வயது வரம்பு: 21 முதல் 55 ஆண்டுகள் வரை
குறிப்பு: இந்த வயது வரம்பு 01.07.2026 அன்றைய தேதியின்படி கணக்கிடப்படும்.
சம்பள விவரம் :
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக தேர்வாகும் நபர்களுக்கு ரூ.35,600 - 1,30,800 சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புத் தேர்வு செயல்முறையை பல்வேறு நிலைகளாகப் பிரித்துள்ளது. விண்ணப்பதாரர்களின் தொழில்முறை கல்வித் தகுதி (Professional Qualification) மற்றும் அவர்கள் விளையாட்டுத் துறையில் பெற்ற பதக்கங்கள் (Medals) ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும், விண்ணப்பதாரரின் பயிற்சி அளிக்கும் அனுபவம் (Coaching Experience) மற்றும் விளையாட்டுகள் குறித்த பொதுவான அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் விளையாட்டு பொது அறிவுத் தேர்வு (Sports General Awareness) நடத்தப்படும்.
முக்கியமாக, விண்ணப்பதாரர்கள் தகுதி பெறுவதற்கு தமிழ் மொழித் தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாகும். இறுதித் தேர்வாக, அந்தந்த விளையாட்டுப் பிரிவு சார்ந்த திறன் மதிப்பீடு மற்றும் நேர்காணல் (Viva-voce) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Professional Qualification
Medals received in the sporting discipline
Coaching Experience
Tamil Test (Minimum 40% score to be obtained to qualify)
Sports General awareness
Discipline specific Performance Evaluation (including viva voice)
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.01.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.01.2026
எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், தேவையான அனைத்து ஆவணங்களுடன் 05.01.2026 முதல் 25.01.2026 தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.sdat.tn.gov.in/ இணையத்தில் சென்று “Register as New User ” பட்டனை கிளிக் செய்து Register செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, அனுபவம் சான்றிதழ், விளையாட்டு சாதனிகளுக்கான சான்றிதழ்கள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து சமர்பிக்க வேண்டும்.