
சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் என்று சாதனை படைத்துள்ளார்.
சீனாவில் பாரா ஆசிரிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நாடுகளினுடைய போட்டியாளர்கள் பலர் பங்கேற்று உள்ளனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சைலேஷ் குமார் தங்கம் என்று சாதனை படைத்தார். மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதை குறிப்பிடத்தக்கது.
மேலும் மகளிருக்கான படகு போட்டியில் பிராச்சி யாதவ் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். இதுவரை இந்தியாவைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் தங்கம் என்று உள்ளனர். மூன்று நபர்கள் வெள்ளிப் பதக்க வென்று இருக்கின்றனர். இரண்டு நபர்கள் வெண்கல பதக்கம் வென்று இருக்கின்றனர். இவ்வாறு 7 பதக்கங்களுடன் தற்போது வரை இந்தியா 3வது இடத்தை பிடித்து இருக்கிறது.
இந்த நிலையில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் முதல்வர் குறிப்பிட்டு இருப்பது, ஆசிய பாரா விளையாட்டு 2022 உயரம் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளி வென்று தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் மீண்டுமொருமுறை பெருமை தேடித்தந்துள்ள நமது மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.