பெண்கள் பாதுகாப்பு திட்டம் தமிழ்நாடு காவல்துறை அசத்தல்!

பெண்கள் பாதுகாப்பு திட்டம்  தமிழ்நாடு காவல்துறை அசத்தல்!

பெண்கள் இரவில் தனியாக பயணிக்க பாதுகாப்பான புதிய திட்டம் ஒன்றினை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

பெண்களின் பாதுகாப்பிற்கு பல்வேறு இடையூறுகள் நேரும் இந்த காலகட்டத்தில் இந்த திட்டம் பெண்களுக்கு மிகவும் தேவையான ஒன்றாகவே கருதப்படுகிறது

இரவு நேரங்களில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக, 'பெண்கள் பாதுகாப்பு திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு காவல்துறை.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள், 1091, 112 , 044-23452365, 044-28447701 ஆகிய உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டால், அவர்கள் இருக்கும் இடங்களுக்கே காவல்துறை ரோந்து வாகனங்கள் வந்து அழைத்துச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லா நாட்களிலும் இந்த சேவையினை பெண்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சேவை முற்றிலும் இலவசம் ஆகும். பெண்கள் பாதுக்காப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்கள் நடைபெறும் சூழலில் இந்த திட்டம் பெண்களிடையே பெரும் வரவேற்பினை பெறும் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com