உஷார் மக்களே..! ஒரே நேரத்தில் 2 புயல் உருவாக வாய்ப்பு..! எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..!

வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்
Published on

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாகவே தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாவதால் சென்னையிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21ம் தேதி உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அரபிக்கடலில் நிலவும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் நிலையில், அடுத்த 10 நாட்களுக்குள் ஒரே நேரத்தில் 2 புயல்கள் உருவாகி தென்னிந்தியாவில் மழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

வருகிற 24-ந்தேதி உருவாக இருப்பதாக கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே தீபாவளிக்கு மறுநாள் (21ம் தேதி) உருவாவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தீபாவளி திருநாளான இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வரும் 23-ந்தேதி சென்னை உள்ளிட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
இன்று முதல் கனமழை வெளுக்கும் மாவட்டங்கள்...வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வரும் வரும் 25-ம்தேதி வரை சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையில் கனமழையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

எனவே பொதுமக்கள் வெளியில் செல்லும் போது குடை, ரெயின் கோர்ட் போன்றவற்றை எடுத்துச்செல்லுமாறு மழைநீர் தேங்கும் பகுதிகளில் நடந்து மற்றும் வாகனங்களில் செல்லும் போது மிகவும் ஜாக்கிரதையாக செல்லும் மாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com