தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்தினால் நடத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான முடிவுகள் வெளியாகியது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஆசிரியர் நியமனத்திற்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் ஆசிரியர் பயிற்சி, பட்டயப் படிப்பு முடித்தவர்கள் மட்டும் முதல் தாளையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் கல்வியியல் பட்டம் பெற்றவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் ஆசிரியர் பயிற்சி, பட்டயப் படிப்பு மற்றும் கல்வியியல் பட்டம் பெற்றவர்கள் என இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும்.

கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை கணினி வழியில் டெட் தேர்வுகள் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் நடத்தப்பட்டன. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்தினால் நடத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை வகுப்பு எடுக்க ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ஆம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், ஆசிரியர்களாக பணிபுரிய நடத்தப்படும் தகுதித் தேர்வான டெட் தேர்வை எழுத 4 லட்சத்து 1886 பேர் பதிவு செய்திருந்தனர்.

பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 15 வரை கணினி வழியில் டெட் தேர்வுகள் காலை மற்றும் மாலை என்று இருவேளைகளில் நடத்தப்பட்டன. இதற்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. முடிவுகளை https://www.trb.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com