தமிழ்நாட்டில் திரையரங்கு கட்டணம் உயர்கிறதா?தீவிர ஆலோசனையில் உரிமையாளர்கள்!

தமிழ்நாட்டில் திரையரங்கு கட்டணம் உயர்கிறதா?தீவிர ஆலோசனையில் உரிமையாளர்கள்!
Published on

மிழ்நாட்டில் 1500 க்கும் மேற்பட்ட திரையரங்குகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்று வருகிறது இந்த கூட்டத்தில் சங்கத்தினுடைய தலைவர் ரமேஷ் பாபு, செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் கஜேந்திரன் மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து வருகை தந்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் பங்கேற்று உள்ளனர்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில் கடந்த வாரமே தியேட்டர் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் திரையரங்குகளில் கட்டணத்தை உயர்த்துவது சம்பந்தமாகவும், சென்னை போன்ற பெருநகரங்களில் வணிக வளாகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திரையரங்குகளால் தனியாக திரையரங்கு நடத்தி வரும் உரிமையாளர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு வருவது குறித்தும் விவாதித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டினுடைய முன்னணி நடிகர்கள் வருடத்திற்கு குறைந்தது இரண்டு படம் வீதம் நடிக்க வேண்டும் என்றும், திரையரங்குகளில் வெளிவந்து 8 வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடி தலங்களில் படங்கள் திரையிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

மேலும் திரையரங்குகளில் 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் திரையரங்கு கட்டணத்திற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டியும், 100 ரூபாய்க்கு கீழ் விற்கப்படும் திரையரங்க கட்டணத்திற்கு 12 சதவீதம் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுவதை மாற்றி குறைந்தபட்ச ஜிஎஸ்டியை வசூலிக்க வேண்டும் என்றும், மத்திய மாநில அரசுகள் திரையரங்கு உரிமையாளர் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதுள்ள திரையரங்கு கட்டணம், பார்க்கிங் கட்டணம், உணவு பொருட்கள் கட்டணத்தை பார்த்தே அதிக அளவில் மக்கள் திரையரங்கிற்கு செல்வதை தவிர்த்து விட்டனர். இதில் மேலும் கட்டணம் உயர்த்தப்பட்டால் திரையரங்குகளை நோக்கி செல்லும் மக்களினுடைய எண்ணிக்கை மேலும் குறையும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com