இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையப் போட்டியில் விருது வென்ற தமிழகம்!

இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையப் போட்டியில் விருது வென்ற தமிழகம்!

லக உணவுப் பாதுகாப்பு தினத்தையொட்டி கடந்த 7.6.2023 அன்று புது தில்லியில் இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையத்தால் 2022 - 2023ம் ஆண்டுக்கான ‘Eat Right Challenge’ போட்டிகள் நடைபெற்றன. இதில் உணவு வணிகங்களுக்கான உரிமம், பதிவுச் சான்று வழங்குதல், உணவு மாதிரிகளைக் கண்காணித்தல், பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு வழங்குவது குறித்து தர மதிப்பீடு செய்தல் மற்றும் சான்று வழங்குதல், தரமான, பாதுகாப்பான, செறிவூட்டப்பட்ட, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு பழக்கத்தை ஏற்படுத்துதல், உணவு உட்கொள்ளும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் போட்டியில் இந்திய அளவில் 260 மாவட்டங்கள் கலந்து கொண்டன. இதில் தேர்வு செய்யப்பட்ட 31 மாவட்டங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருவள்ளூர், திருப்பூர், சிவகங்கை, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, வேலூர் ஆகிய 13 மாவட்டங்கள் சிறந்த செயல்பாட்டுக்கான பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றன. இந்தப் போட்டியில், கோயம்புத்தூர் மாவட்டம் இந்திய அளவில் முதலிடம் பெற்று விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் உணவு பாதுகாப்பு துறையில்  மனித வளம் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய தரவுகள், தர நிர்ணய விதிமுறைகளைப் பின்பற்றுதல், உணவுப் பொருட்களைப் பரிசோதிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் ஆகிய ஐந்து குறியீடுகளின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்து, 2022 - 2023ம் ஆண்டுக்கான மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டுக்கான செயல்பாட்டில் இந்திய அளவில் தமிழ்நாடு மூன்றாம் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 2022 - 2023ம் ஆண்டுக்கான ‘Eat Right Challenge’ போட்டியில் சிறந்த செயல்பாட்டுக்கான பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டுக்கான செயல்பாட்டில் இந்திய அளவில் தமிழ்நாடு மூன்றாம் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு, வழங்கப்பட்ட விருதினையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் ஆர்.லால்வேனா, உணவு பாதுகாப்புத் துறை இயக்குநர் மற்றும் கூடுதல் ஆணையர் தேவபார்த்தசாரதி, துணை இயக்குநர் பிரதீப் கே.கிருஷ்ணகுமார், மாவட்ட நியமன அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com