#BREAKING: தமிழகத்தில் 10, 12 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஸ் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.
பொதுத் தேர்வு...
பொதுத் தேர்வு...
Published on

தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை மாணவர்களின் நலன் கருதி இந்தாண்டு முதல் தமிழக அரசு ரத்து செய்துள்ளது. எனவே,10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே இந்தாண்டு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 4-ம்தேதி04.11.23) அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் தேதியை தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பார் எனக்கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஸ் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதன்படி, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை நடைபெறும் என்றும் மே 8-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

அதேபோல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் 11 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்தாண்டு +2 பொதுத்தேர்வை மொத்த 8,70,000 மாணவர்கள் எழுத உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
11ம் வகுப்பு பொது தேர்வு ரத்து குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
பொதுத் தேர்வு...

தமிழ்நாட்டிற்கு வரும் 2026-ல் சட்டமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்டு அதற்கு முன்பாகவே தேர்வு பணி அனைத்தும் முடிவடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com