தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக அதிக அளவு வாக்குப்பதிவு..! காரணம் இதுதான்..!!

Tamil Nadu Assembly Election
Tamil Nadu Assembly ElectionAI Image
Updated on

பரபரப்பாக நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாநில அளவில் சுமார் 84 முதல் 85 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடந்ததாக ஆரம்பக்கட்டத் தரவுகள் கூறுகின்றன. இது முந்தைய தேர்தல்களை விட உயர்ந்த அளவாக பார்க்கப்படுகிறது.

2021-ல் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் சுமார் 72.81% ஆக இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அனைவரையும் அச்சுறுத்திய கோவிட் காலகட்டத்திலும் இந்த வாக்குப்பதிவு நல்ல அளவாகக் கருதப்பட்டது. குறிப்பாக பெண்கள் மற்றும் கிராமப்புற வாக்காளர்கள் நல்ல பங்கேற்பு அளித்ததாக அன்றைய சர்வேக்கள் கூறியது. இதற்கு முந்தைய தேர்தலான 2016 ல் சுமார் 74.24% வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழக வரலாற்றில் முதல்முறையாக 85 சதவீதமாக அதிகரித்த வாக்குப்பதிவுக்கான காரணங்கள் என்ன என்று பொது மக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விதவிதமான கருத்துக்கள் அலசப்பட்டு வருகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்குகள் சதவீதம் அதிகரித்ததற்கான பல காரணங்களில் முக்கியமான ஒன்று எப்போதும் இருக்கும் கட்சிகள் கூட்டணி மற்றும் புதிய கட்சிக்கிடையே ஏற்பட்ட கடுமையான போட்டி நிலை. இதனால் ஒவ்வொரு வாக்காளருக்கும் அவர்கள் எந்தக் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் “என் வாக்கு முக்கியம்” என்ற மனநிலை அதிகரித்தது. போட்டி அதிகமானால் பொதுவாக வாக்கு சதவீதம் உயரும்.

புதிய வாக்காளர்களாக முதல் முறை வாக்களிக்கும் இளைய தலைமுறையினரின் சதவீதம் இம்முறை அதிகமானதாக தகவல்கள் வந்தன.இதுவும் வாக்கு சதவிகிதத்தை உயர்த்தும் முக்கிய காரணம்.

பொதுவாகவே இந்திய மாநிலங்களில் தமிழகத்தில் பெண் வாக்காளர்களின் அதிக பங்கேற்பு பல தேர்தல்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது எனலாம்.பல மாவட்டங்களில் பெண்கள் அதிக அளவில் வரிசையில் நின்று வாக்களித்தது சான்று. அதேபோல கிராமப்புறங்களில் நகரங்களை விட அதிக உற்சாகத்துடன் காலை முதலே மக்கள் வரிசையில் நின்று வாக்களித்ததும் கவனிக்க வேண்டும்.

குறிப்பாக இந்த முறை.SIR எனப்படும் போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர் நீக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் சீரமைப்பு செய்யப்பட்டதால் செயல்படும் வாக்காளர்கள் பட்டியல் மேம்பட்டிருக்கும் வாய்ப்பு அதிகம் இருந்திருக்கலாம் எனவும் இதுவே வாக்கு சதவீதம் உயரக் காரணம் என கருதப்படுகிறது.

கட்சிகளைப் பொறுத்தவரை தரும் வாக்குறுதிகள் மற்றும் ஆற்றிய செயல்கள் வாக்குப்பதிவை சற்று அதிகரித்தது என்றாலும் ஆட்சியில் மாற்றம் அல்லது தொடரவைக்கலாமா என்ற மக்களின் மாற்றத்தை விரும்பிய வலுவான மனநிலை வாக்கு சதவீதம் உயரக் காரணம் என்பது ஒரு சாரார் கருத்து.

அன்று இல்லாத டெக்னாலஜியும் முக்கிய காரணம் ..சமூக ஊடககங்களின் தாக்கம்,திரை உலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வாக்களித்த காட்சிகள் மற்றும் பரப்புரைகள் உடனுக்குடன் சமூக ஊடகங்களில் பரவியதால் மக்களுக்கு மேலும் வாக்கு குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டிற்கும் வாய்ப்பு அதிகம்.

கட்சிகளிடையே கடுமையான போட்டி , இளைஞர்களின் அதிக பங்கேற்பு , பெண்கள் வாக்குகள், மாற்ற மனநிலை ஆகியவை அனைத்தும் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்க காரணங்களாக அமைந்துள்ளது.

வாக்கு சதவீதம் உயர்வு நல்லதே எனினும் இதன் விளைவுகளை வரும் தேர்தல் முடிவுகளில் அறியலாம் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com