#JUST IN : தமிழக சட்டப்பேரவை தேர்தல் : மதியம் 1.40 மணி நிலவரம்..!!

TVK Vijay
TVK Vijay
Updated on

அரியணை யாருக்கு?

முன்னிலை நிலவரம் தவெக 112, திமுக 62, அதிமுக 60, நாதக 0

மெஜாரிட்டியை நெருங்கும் விஜய் தனித்தே தவெக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.

திருச்சி கிழக்கில் விஜய் தொடர்ந்து முன்னிலை. 12வது சுற்றின் முடிவில் திருச்சி கிழக்கில் தவெக தலைவர் விஜய் 18,032 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக 5 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. சௌமியா அன்புமணி போட்டியிட்ட தர்மபுரி தொகுதியில் பாமக முன்னணியில் உள்ளது.

அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் பாமக முன்னணியில் உள்ள தொகுதிகள் தர்மபுரி, ஜெயங்கொண்டம், சோளிங்கர், பென்னாகரம், செஞ்சி போன்ற தொகுதிகளில் பாமக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

காங்கிரஸ் முன்னிலையில் உள்ள 6 தொகுதிகள் கடலூர், விளங்கோடு, மயிலாடுதுறை, மேலூர், குளச்சல், திருவாடானை தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் தலா 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர், திருத்துறைப்பூண்டி என 2 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலையில் உள்ள தொகுதிகள் கீழ்வேளூர், பழனி, பத்மநாபபுரம் என 3 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலையில் உள்ளது.

திருச்சி மேற்கில் திமுகவைச் சேர்ந்த கே. என். நேரு வெற்றி பெற்றுள்ளார்.10 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில் மட்டும் முன்னிலையில் உள்ளது. விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னணியில் உள்ளது.

முன்னிலையில் உள்ள தொகுதிகள் :

பாஜக முன்னிலையில் உள்ள தொகுதிகளின் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி தளி, உதகை, சாத்தூர், நாகர்கோவில் ஆகிய 4 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள். சாத்தூர் தொகுதியில் பாஜக கட்சியின் மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இருந்து வருகிறார்.

மதியம் ஒரு மணி நிலவரப்படி தி நகர் தொகுதியில் தவெக எம் ஆனந்த் முன்னிலையில் உள்ளார். தஞ்சாவூர் தொகுதியில் தவெக வேட்பாளர் விஜய் சரவணன் வெற்றி பெற்றுள்ளார். இவர் 18,252 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சட்டமன்றத்திற்கு செல்லக்கூடிய முதல் வேட்பாளர் என்ற அறிவிப்பை அவர் பெற்றுள்ளார். மதியம் 1.30 மணி நிலவரப்படி வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் உள்ளார். கோபிசெட்டிபாளையம் தொகுதி தவெக வேட்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் உள்ளார்.

இதையும் படியுங்கள்:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி..!
TVK Vijay

13வது சுற்றும் முடிவிலும் கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவை சந்தித்திருக்கிறார். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் இருந்தே பின்னடைவில் தான் இருந்துள்ளார். கொளத்தூரில் தவெகவின் வி.எஸ். பாபு 8, 061 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். மு க ஸ்டாலின் 44,504 வாக்குகள், அதிமுக சந்தான கிருஷ்ணன் 12, 259 வாக்குகள் பெற்றிருக்கிறார்.

மதுரை கிழக்கு தொகுதியில் 13-வது சுற்று முடிவில் அமைச்சர் மூர்த்தி 4,348 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்திருக்கிறார். தவெக முன்னணியில் உள்ளது. திருச்செந்தூர் தொகுதியில் 12வது சுற்று முடிவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 2,273 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com